பாஜக பெங்களூரு எம்.பி., தேஜஸ்வி சூர்யா, சென்னையைச் சேர்ந்த பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தை திருமணம் செய்ய உள்ளார். பிஜேபியின் மோஸ்ட் எளிஜிபிள் பேச்சிலர் தேஜஸ்வி சூர்யா.
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் திருமணம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் சென்னையின் பிரபல பாடகரும் பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை மார்ச் 4, 2025 அன்று பெங்களூருவில் திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
தேஜஸ்வி பெங்களூரு தெற்கு எம்பி. பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவராக உள்ளார். சிவஸ்ரீ ஒரு பயிற்சி பெற்ற பாடகி. நடனக் கலைஞர். உயிரியல் பொறியாளர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேஜஸ்வி 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' என்று கருதப்படுவதால், இந்த செய்தி இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ‘கோயில்களில் இது என்ன கலவரம்...’ஆர்எஸ்எஸின் ஊதுகுழலையே தூக்கி எறிந்த மோகன் பகவத்..!
தேஜஸ்வி சூர்யா பாஜகவில் 'ஃபயர் பிராண்ட்' தலைவர் என்று அழைக்கப்படுகிறார். அவர் தனது வெளிப்படையான அறிக்கைகள், இளைஞர்களுடனான தொடர்புக்காக அறியப்பட்டவர். 1990 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை அரசு ஊழியர், தாய் ஆசிரியர். தேஜஸ்வி தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை பெங்களூருவில் பயின்றார். பின்னர் இந்திய தேசிய சட்டப் பள்ளியிலிருந்து சட்டப் பட்டம் பெற்றார்.
ஏபிவிபியில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். 2019 மக்களவை தேர்தலில் பெங்களூரு தெற்கில் இருந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இளம் எம்.பி.க்களில் ஒருவரானார். 2020ல் பாஜக யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். தேஜஸ்விக்கு வாசிப்பது, எழுதுவது, யோகா செய்வது மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் அவரது பேச்சு சர்ச்சையிலும் சிக்குகிறது.
சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் தென்னிந்திய பாரம்பரிய இசை உலகில் நன்கு அறியப்பட்டவர். கர்நாடக இசைப் பாடகி என்பதைத் தவிர, அவர் பரதநாட்டிய நடனக் கலைஞரும் கூட. அவரது கல்வியும் மிகவும் ஈர்க்கக்கூடியது. இவர் பயோ இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக் படித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ. சென்னை சமஸ்கிருத கல்லூரியில் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். சிவஸ்ரீ சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார். அவரது யூடியூப் சேனலில் 2 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இசையைத் தவிர, சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் அவருக்கு மிகவும் பிடிக்கும். 'பொன்னியின் செல்வன் - பாகம் 2' கன்னட பதிப்பிலும் பாடியுள்ளார்.
கடந்த ஆண்டு, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, 'பூஜிஸ்லாண்டே ஹூக்லா பாட்' பாடல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பாடலை பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் அற்புதமாகப் பாடியதோடு, பலராலும் பகிரப்பட்டது. இந்தப் பாடலைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை பாராட்டினார். தற்போது தேஜஸ்வி சூர்யா பிரதமரால் கூட பாராட்டப்பட்ட பாடகியை மணக்கிறார்.
சமூக ஊடகங்களில், தேஜஸ்வி -சிவஸ்ரீ 'சரியான ஜோடி' என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால், இரு குடும்பத்தினரும் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. ஆனால் தகவல்கள் நம்பும்படியானால், திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த செய்தி சமூக வலைதளங்களில் விவாதத்தை சூடுபடுத்தியுள்ளது. இந்த ஜோடிக்கு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காங்கிரஸின் பொய் பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கிய பாஜக... மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் தயார்..!