தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த வாசலா ஸ்ரீதர் (34) கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணிக்கு வேறு ஒருவருக்கு போன் செய்ய முயன்று ராங் கால் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர், இருவரும் காதலித்து, பெரியவர்களை சம்மதிக்க வைத்து 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 11, 9 மற்றும் 7 வயதுடைய மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீதர் தனது குடும்பத்துடன் வாழ்வாதாரத்திற்காக ஐதராபாத் ஜகத்கிரிகுட்டா பகுதிக்கு வந்து, எல்லம்மபந்தா, பி.ஜே.ஆர். காலனியில் வசித்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கல்யாணி வீட்டில் இருந்தபடி குழந்தைகளை பராமரித்து வந்தார். ஸ்ரீதர் தனியார் ஊழியராக பணிபுரிந்து வந்த நிலையில் வீட்டிற்கு லேட்டாக தான் வருவார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பார்ப்பதை தீவிரமாக இருந்துள்ளார் கல்யாணி. அவருக்கு சமீப காலமாக ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்திற்கு புறம்பான காதலாக மாறியது.
இந்த நிலையில் கணவர் இல்லாத சமயத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர் . அதேபோல அந்த நபருடன் தினமும் பல மணி நேரமும் தொலைபேசியில் பேசி வந்தார். இதை கவனித்த ஸ்ரீதர், மனைவியை பலமுறை நடத்தையை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால், கல்யாணி அவரது பேச்சை பொருட்படுத்தாமல், அந்த நபருடன் தொடர்ந்து உறவு நீடித்து வந்தார்.இதன் விளைவாக, ஸ்ரீதர் மற்றும் கல்யாணி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட தொடங்கின.
இதையும் படிங்க: 'பிளான் B’-யைக் கையில் எடுத்த சசிகலா... எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி எச்சரிக்கை...!
இதனால் கல்யாணி, விவாகரத்து பெற்று பிரிந்திடலாம் என்று கணவனை எச்சரித்தார். இதனால் பிரச்சினை வீட்டின் இருதரப்பு பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இருவரையும் சமாதானம் செய்ய முயன்றும், கல்யாணி தனது நடத்தையை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும் தனது காதலனுக்காக கணவனையும், குழந்தைகளையும் விட்டுவிட முடிவு செய்தார். இதனால், மீண்டும் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த கல்யாணி விவாகரத்து கொடுத்துவிடு நான் திங்கட்கிழமை காதலனுடன் செல்கிறேன் என்றார். இதனால் ஸ்ரீதர் வீட்டில் இருந்த கத்தியால் கல்யாணி கழுத்து, முகம் மற்றும் கைகளில் கண்மூடித்தனமாக தாக்கினார். பின்னர், தானும் இறந்துவிடுவதாக கூறி, அதே கத்தியால் தனது இரு கைகளின் மணிக்கட்டு பகுதியிலும் வெட்டிக்கொண்டார். காப்பாற்றுமாறு கத்தியபடி கல்யாணி வீட்டை விட்டு வெளியே ஓடினார். அருகில் வசித்தவர்கள் இதை கவனித்து, இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு இருவரும் நிலைமையும் அபாய கட்டத்தை தாண்டி இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜகத்கிரிகுட்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடிதூள்... இதற்கெல்லாம் இனி வரியே கிடையாது... மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு...!