சென்னையில் சமீப காலமாக கொலை, கொள்ளை குற்றங்கள் அதிகமாக வெளிவரத்துவங்கி உள்ளன. மக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். சில சமயங்களில் குற்றவாளிகள் கொலையை மறைக்க நூதன வழிகளை கையாண்டு வருவதும் நடக்கிறது. கொலை செய்யப்பட்டவரின் முகத்தை சிதைப்பது, உடல் பாகங்களை தனித்தனியாக வெவ்வெறு இடங்களில் தூக்கி வீசுவது போன்ற செயல்களால் கொலை செய்யப்பட்டது யார்? அவரை கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படும்.

சில சமயங்களில் வேறு ஒரு இடத்தில் கொலை செய்துவிட்டு, அதற்கு சம்பந்தமே இல்லாத மற்றோரு இடத்தில் வந்து கொலையானவரின் சடலத்தை விட்டுவிட்டு செல்வது போன்ற நடவடிக்கைகளையும் குற்றவாளிகள் கையாள்வது உண்டு. குற்றவாளிகள் எத்தனை முறைகளை பின்பற்றினாலும், போலீசார் தங்களது அதி தீவிர விசாரணையால் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவது உண்மையே. இந்நிலையில் போலீசாரின் கவனத்தை திசை திருப்புவது போன்றும், போலீசாருக்கு சிக்கல் ஏற்படுத்துவது போன்றதுமான ஒரு சம்பவம் சென்னை தண்டையார் பேட்டை அருகே நடந்துள்ளது.
இதையும் படிங்க: குவாட்டரை பங்கு பிரிப்பதில் தகராறு.. நண்பண் தலையில் கல்லை போட்டு கொன்ற தொழிலாளி.. மதுபிரியர்கள் நட்பில் சோகம்..!

இன்று காலை சென்னை தண்டையார் பேட்டை இளையா தெரு பகுதியில் திலகர் நகர் குடியிருப்பு அருகே சாலை ஓரத்தில் உள்ள பாதாள குழாயின் அருகே துர்நாற்றாம் வீசுவதை அப்பகுதி மக்கள் உணர்ந்தனர். அதன் அருகே சென்று பார்த்த போது குழாய்க்கு பின்புறம், ஒரு ஆண் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த கரைகளுடன் கிடந்தது தெரிந்தது. கொலையாளிகள் உடலை அப்படியே தூக்கிவீசி விட்டு செல்லாமல், குழாயின் பின்புறத்தில் உடலை கிடத்தி உள்ளனர். பின்னர் உடலின் மேல் அருகில் கிடந்த மணல் மூட்டை, கற்கள் மூட்டையை வைத்து அடுக்கி உடல் வெளியே தெரியாதவாறு மூடி உள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் சடலத்தை காண்பதற்கு அப்பகுதியில் மக்கள் திரண்டிருந்தனர். அவர்களை அப்புறப்படுத்திய போலீசார், மணல் மற்றும் கற்கள் மூட்டைக்கு அடியில் கிடந்த சடலத்தை கண்டனர். உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்தவர் யார்? சடலம் எப்படி இந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியின் இதயத்தை துளைத்த 29 குண்டுகள்.. இதயம் என்ற பகுதியே இல்லாமல் போன சோகம்.. கோவை ஆசிரியை கொலையில் நடந்தது என்ன..?