தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்தது.
இதனிடையே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி நடைபெறுவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்தது. இருப்பினும் வாக்காளர் திருத்த பணிகளுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது.

இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் திருத்தப் பணிகள் தொடர்பாக அப்போது ஆலோசிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தை அணுக அதிமுக முடிவு செய்துள்ளது. முழுக்க முழுக்க தேர்தல் அதிகாரிகள் தான் தேர்தல் திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜகவுக்கு வேட்டு வைத்த ராகுல்... ஒரே ஒரு போட்டோவால் ஒட்டுமொத்த இமேஜும் காலி... அடுத்தடுத்து 5 குற்றச்சாட்டுகள்..!
வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக அதிமுக முடிவு செய்துள்ள நிலையில், ஜெயக்குமார் உள்ளிட்ட சில அதிமுக நிர்வாகிகள் இன்னும் சற்று நேரத்தில் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக்கை சந்திக்கின்றனர். அரசியல் கட்சி பூத் ஏஜென்ட்களிடம் வாக்காளர் திருத்த படிவங்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பூத் ஏஜெண்டுகள் படிவங்களை கையாண்டால் பிரச்சனைகள் உண்டாகும் என்று அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று முதல்..! அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்... SIR பணிகள் தொடக்கம்...!