• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்! கஞ்சா போதையில் பைலட்? அதிர்ச்சி தகவல்!

    தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த, 'ஏர் இந்தியா' விமானம், நடுவானில் திடீரென, 300 அடி கீழே இறங்கி கட்டுப்பாட்டை இழந்து பறந்த சம்பவத்தில், முதன்மை பைலட் கஞ்சா போதையில் இருந்தது மருத்துவ பரிசோதனையில் ஊர்ஜிதமாகி உள்ளது.
    Author By Pandian Thu, 13 Aug 2026 15:28:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Air India Phuket-Delhi Flight Incident: Pilot Tests Positive for Cannabis

    புதுடெல்லி: தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென சுமார் 300 அடி கீழே இறங்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில், விமானத்தின் முதன்மை பைலர் கஞ்சா பயன்படுத்தியிருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விமானம் நிலைதடுமாறியதற்கு பைலரின் போதைப்பொருள் பயன்பாடுதான் காரணமா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.

    கடந்த 4-ம் தேதி புக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியாவின் ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டது. அதில் 137 பயணிகளும் 8 விமானப் பணியாளர்களும் இருந்தனர். நடுவானில் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக கீழ்நோக்கி இறங்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர்.

    விமான விபத்து விசாரணை அமைப்பு நடத்திய முதற்கட்ட ஆய்வில், சுழல் காற்றில் விமானம் சிக்கியதால் அதன் ஹைட்ராலிக் மற்றும் தானியங்கி பைலட் அமைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    Airindia

    இதற்கிடையே, விமானத்தை இயக்கிய முதன்மை பைலர் குறித்து வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் நடுவானில் நிலைதடுமாறியபோது, அவர் காக்பிட்டில் சுருண்டு கிடந்ததாகவும், காலில் ஒரு காலணி கூட இல்லாமல், அரைகுறை ஆடைகளுடன் இருந்ததாகவும் சில பயணிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் பைலருக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரால் தனியாக நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்ததாகவும், அதிகாரிகள் உதவியுடன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரிசோதனையில் கஞ்சா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும், புக்கெட்டில் விமானம் புறப்படுவதற்கு முன்பு சக ஊழியர்களுக்கு பைலர் மதுபான விருந்து அளித்ததாகவும், அப்போது அவர் கஞ்சா பயன்படுத்தியதாக விமானப் பணிப்பெண் ஒருவர் புகார் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

    விமானம் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, பயணிகள் பகுதிக்கு சென்ற பைலர், காயமடைந்த பயணிகளிடம் நலம் விசாரிப்பது போல நடந்து கொண்டதுடன், தன்னை செல்போனில் வீடியோ எடுக்கக்கூடாது என எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால், பைலர் போதையில் இருந்ததால்தான் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததா, அல்லது தொழில்நுட்ப கோளாறே முதன்மை காரணமா? என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ளது. இதற்கான முழுமையான பதில் விசாரணை முடிவில்தான் தெரியவரும்.

    இதையும் படிங்க: வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

    மேலும் படிங்க
    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    தமிழ்நாடு
    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    இந்தியா
    கணவருக்கு பாதபூஜை நடத்தி அசத்திய பிரணீதா சுபாஷ்..!! ஷாக்கான நெட்டிசன்கள்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    கணவருக்கு பாதபூஜை நடத்தி அசத்திய பிரணீதா சுபாஷ்..!! ஷாக்கான நெட்டிசன்கள்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    சினிமா
    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? மத்திய அரசு போட்டது அதிரடி செக்!

    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? மத்திய அரசு போட்டது அதிரடி செக்!

    இந்தியா
    "காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!

    "காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    தமிழ்நாடு
    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    இந்தியா
    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? மத்திய அரசு போட்டது அதிரடி செக்!

    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? மத்திய அரசு போட்டது அதிரடி செக்!

    இந்தியா

    "காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!

    தமிழ்நாடு
    ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயண சலுகை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயண சலுகை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share