மும்பை: நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவான அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அனில் அம்பானி மீது, ரிலையன்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (ஆர்எச்எஃப்எல்) மூலம் நடந்த 228.06 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் சிபிஐ கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது.
இது அம்பானி குடும்பத்தின் இளைஞருக்கு எதிரான முதல் கிரிமினல் வழக்காக அமைந்துள்ளது. யூனியன் வங்கி (முன்னர் ஆந்திரா வங்கி) அளித்த புகாரின் அடிப்படையில், ஜெய் அன்மோல், ஆர்எச்எஃப்எல் முன்னாள் ஓய்.எஸ்.இ.ஓ. ரவீந்திர சுதால்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவானது.
அனில் அம்பானிக்கு சொந்தமான ராகாஸ் நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிங்க: கடலில் விழுந்து காணாமல் போன மீனவர்... கண்டுக்காம இருக்கீங்களே?.. சீமான் ஆதங்கம்...!
விசாரணையில், அனில் அம்பானி 17,000 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் (இ.டி.) வழக்கு பதிவு செய்து, அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரது சொத்துக்களை இ.டி. முடக்கியது. இந்நிலையில், ஜெய் அன்மோல் மீது சிபிஐ வழக்கு பதிவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐக்கு அனுப்பப்பட்ட எழுத்துப்பூர்வ புகாரில், ஜெய் அன்மோல், அனில் அம்பானி, ரவீந்திர சுதால்கர் உள்ளிட்டோர் கடன் வழங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்துதலில் முறைகேடுகள் செய்து, வங்கிக்கு 228.06 கோடி ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆர்எச்எஃப்எல் முன்னாள் இயக்குநர்களாக இருந்த ஜெய் அன்மோல் மற்றும் சுதால்கர், கணக்குகளை சுட்டிக்காட்டி, நம்பிக்கைத் துரோகம் செய்து, கடன் பணத்தை தவிர வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தியதாக வங்கி குற்றம் சாட்டியுள்ளது. யூனியன் வங்கி, கடன் கட்டுப்பாடுகளை பின்பற்றும்படி நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், குற்றவாளிகள் அதை மீறியதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ ஆவணங்கள், கடன் கணக்குகள், உள் பதிவுகளை ஆய்வு செய்ய உள்ளது. நிறுவன அதிகாரிகள், வங்கி ஊழியர்களை விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அனில் அம்பானி குழுமம் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த வழக்கு, அம்பானி குடும்பத்தின் நிதி சிக்கல்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர உள்ளது.
இதையும் படிங்க: நீதிபதிகளையும், நீதித்துறையையும் மிரட்டுறாங்க!! இதை விட பெரிய அச்சுறுத்தல் கிடையாது! அண்ணாமலை ஆவேசம்!