மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து அவரது சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில், ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடைந்தது. இதேபோல் நான்கு கட்ட சுற்றுப்பயணங்களை எடப்பாடி பழனிச்சாமி முடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஐந்தாம் பட்ட சுற்றுப்பயணத்திற்கான முக்கிய அறிவிப்பு வெளியானது. ஒரு பதினேழாம் தேதி முதல் தர்மபுரி, நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தர்மபுரி மாவட்டத்திலுள்ள தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய இடங்களிலும், 19, 20, 21 ஆம் தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: எங்களையும் பதவியை விட்டு தூக்குங்க... எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஈரோடு அதிமுக டீம்...!
தொடர்ந்து 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், உதகை, கூடலூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் நடத்துகிறார். இதனை அடுத்து 25ஆம் தேதி திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியிலும், 25, 26 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் டவுன், அரவக்குறிச்சியில் வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரத்தில் தரகம்பட்டி, குளித்தலையில் தோகைமலை ஆகிய இடங்களில் தனது ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ள இருக்கிறார்.
இதையும் படிங்க: கொள்ளையடிக்க தெரிஞ்சா தான கரப்ஷன் பண்ண முடியும்! திமுக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி