தெற்கு ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் இதுவரை 34 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முனிச்சிலிருந்து சுமார் 158 கிலோமீட்டர் (98 மைல்) தொலைவில் உள்ள ரீட்லிங்கன் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மத்திய மற்றும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் ரயில் பெட்டிகள் உள்ளூர் காட்டுக்குள் விழுந்ததால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
விபத்து விவரங்கள்:
ஜெர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்-வ்ரெட்டம்பேர்க்கில் 100க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயிலானது, நேற்று மாலை 6.10 மணி அளவில் விபத்துக்குள்ளானது. பிரெஞ்சு எல்லைக்கு அருகில், பேடன்-வூர்ட்டம்பேர்க்கின் பிபெராக் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் தடம் புரண்ட 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி காட்டுக்குள் விழுந்ததால் பயணிகளை தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: “அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்” - விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிமுக வளர்மதி பதிலடி...!
இந்த விபத்து மாலை 6:10 மணிக்கு நிகழ்ந்தது. ரயிலில் சுமார் 100 பயணிகள் இருந்தனர். இந்த விபத்தில், ரயிலின் சுமார் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு காட்டுப் பகுதியில் விழுந்தன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.
ஜெர்மன் அதிபர் அதிர்ச்சி:
ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ், விரிவடைந்து வரும் துயரச் சம்பவத்திற்கு விரைவாக பதிலளித்தார். தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “பிபெராச் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நான் உள்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன், மேலும் மீட்புப் படைகளுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். அவர்களது உறவினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
விபத்து எப்படி நடந்தது?
விபத்துக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அதிகாரிகளின் ஆரம்ப கட்ட சோதனைகளில் படி, இயற்கை சீற்றம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. பேடன்-வூர்ட்டம்பேர்க்கின் உள்துறை அமைச்சர் தாமஸ் ஸ்ட்ரோபிள், அப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதாகவும், இதனால் நிலச்சரிவு ஏற்பட்டுக்கூட இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் 40 கிலோமீட்டர் ரயில் பாதைகள் மூடப்பட்டன. கடுமையான புயல் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று ஜெர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளுக்கு முன்பு தந்தைக்கு நேர்ந்த அதே கொடூரம்... சொத்துக்காக தாயை அடித்தே கொன்ற மகன் கைது...!