ஆன்-லைன் விற்பனைத் தளங்களான அமேசான், ஃபிளிப்கார்டில் பாகிஸ்தான் தேசியக் கொடியை விற்பனை செய்ய மத்திய அரசு தடைவிதித்து, இரு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(சிசிபிஏ), அமேசான், ஃபிளிப்கார்ட், யுபை இந்தியா, மற்றும் எட்சை ஆகிய ஆன்லைன் தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் தங்கள் விற்பனைத் தளத்திலிருந்து உடனடியாக பாகிஸ்தான் தேசியக் கொடி விற்பனையை நீக்க வேண்டும், இந்தியச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் அணுக்கதிர் வீச்சு கசிவா? இந்தியா மீது அபாண்ட பழி.. IAEA நெத்தியடி பதில்..!
இது தொடர்பாக பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி எக்ஸ் தளத்தி்ல் பதிவிட்ட கருத்தில் “ ஆன்லைனில் பாகிஸ்தான் தேசியக் கொடி விற்பனைக்கு தடை விதித்து சிசிபிஏ உத்தரவிட்டு, இது தொடர்பாக அமேசான் இந்தியா, ஃபிளிப்கார்ட் இந்தியா, யுபைஇந்தியா, இடேசஸ் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த உணர்வுப்பூர்வமற்ற செயலை பொறுத்துக்கொள்ள முடியாது. மின்னணு வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தளத்தில் உள்ள பாகிஸ்தான் தேசியக் கொடி விற்பனையை உடனடியாக நீக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்-லைன் விற்பனை தளங்களில் பாகிஸ்தான் தேசியக் கொடி விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு வலியுறுத்தியிருந்தனர். இது தொடர்பாக பியூஷ் கோயலுக்கு கடிதமும் எழுதியிருந்தனர்.
அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தலைவர் பிசி பாரதியா எழுதிய கடிதத்தில் “நமது தேசிய உணர்வு மற்றும் இறையாண்மையின் மையத்தை பாதிக்கும் ஒரு விஷயம் குறித்து நான் எனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறேன். பாகிஸ்தான் தேசிய கொடிகள், லோகோ தாங்கிய தேநீர் கோப்பைகள் மற்றும் டி-சர்ட்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற முக்கிய மின் வணிக தளங்களில் வெளிப்படையாக விற்கப்படுகிறது.

நமது ராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் தீவிரமாக ஈடுபட்டுள்ளபோதும் இந்த குழப்பமான சூழ்நிலை உருவாகிறது. நமது நாட்டைப் பாதுகாக்க நமது வீரர்கள் ஒப்பிடமுடியாத துணிச்சலையும் தியாகத்தையும் வெளிப்படுத்தும் நேரத்தில், தேசவிரோதமான பொருட்களை விற்பனை செய்வது உணர்வற்ற, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்திருந்தார்.
அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியதைத் தொடர்ந்து அமேசான், ஃபிளிப்கார்டில் பாகிஸ்தான் தொடர்பான தேசியக் கொடிகள், லோகா, பொருட்கள் விற்பனைக்கு தடைவிதித்தது மத்திய அரசு
இதையும் படிங்க: இந்திய BSF வீரரை இப்படியெல்லாம் சித்ரவதை செய்தார்காளா? பாக். செய்த கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!!