முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை நாட்டின் முன்னாள் அதிபராக பொறுப்பு வகித்து வந்தவர் மகிந்த ராஜபக்சே. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைக்கு பின்னர், மகிழ்ந்த ராஜபக்சே அரசு கவிழ்ந்து, அவர் குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அதனைத்தொடர்ந்து, அங்கு மக்கள் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அனுர குமார திஸநாயக்கே தேர்தலை எதிர்கொண்டு மிகப்பெரிய வெற்றி அடைந்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார்.

இதனையடுத்து ராஜபக்சே குடும்பத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தூசு தட்டப்பட்டு வருகின்றன. அதன்படி சொத்து குவிப்பு வழக்கில் ராஜபக்சேவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: புஸ்ஸி கொஞ்சம் வெளிய நில்லுங்கள்... அதிர்ச்சி கொடுத்த விஜய்...உள்ளே என்ன நடந்தது?
இன்று காலை பெலியத்த பகுதியில் வைத்து சிஐடி அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். யோஷித ராஜபக்ஷ 2006 ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் செய்தி தொடர்பாளரான எஸ்எஸ்பி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனவரி 3 ஆம் தேதி, கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிலத்தின் உரிமை குறித்து வாக்குமூலம் அளிக்க யோஷித ராஜபக்ஷ சிஐடி முன் ஆஜரானார்.
இதையும் படிங்க: “எங்க தில்லு யாருக்கும் கிடையாது” - அதிமுக, பாஜகவை மறைமுகமாக சாடிய சீமான்!