சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் தற்போது தனி நாடாக செயல்பட்டு வருகிறது. ஆனால் சீனா இன்னும் தைவானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. ‛‛தைவான் தனி நாடு அல்ல. அது சீனாவின் ஒரு பகுதி தான்‛‛ என்று சீனா தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே பிரச்சனை உள்ளது. இதனால் அவ்வப்போது இருநாடுகளின் எல்லையில் போரும் நிலவி வருகிறது.

அதேபோல் நம் நாடும் தைவானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் தூதரக உறவை தனியாக வைத்து சீனாவுக்கு அப்பாற்பட்டு தைவானுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது. இருநாடுகள் இடையே வர்த்தக உறவு உள்ளது. சீனாவிடம் இருந்து பிரிந்ததால் தைவான் மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ளது.
இதையும் படிங்க: மறுபடியும் சொல்றேன்.. வீக்கான பிரதமர்: H1B விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்..!!
இந்நிலையில் தைவான் நாட்டின் குறைந்த பிறப்பு விகிதத்தை சமாளிக்கும் வகையில், அந்நாட்டு அரசு புதிய சமூக நலத் திட்டங்களை அறிவித்துள்ளது. குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ஒவ்வொரு பிறந்தக் குழந்தைக்கும் ரூ.3 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்றும் இரட்டை குழந்தை பிறந்தால் ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தைவான் உலகளவில் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் முன்னிலையில் உள்ளது. 2024ஆம் ஆண்டு, அந்நாட்டில் வெறும் 1,35,000 குழந்தைகள் மட்டுமே பிறந்தன, இது ஒன்பதாவது தொடர்ச்சியான வீழ்ச்சியாகும். தற்போது 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை 65 வயதுக்கு மேற்பட்டோராக உள்ளதால், தைவான் 2025இல் 'சூப்பர்-ஏஜ்ட் சமூகம்' (super-aged society) ஆக மாறியுள்ளது. இது தேசிய பாதுகாப்பு சவாலாகக் கருதப்படுகிறது, ஏனெனில் வேலைவாய்ப்பு, ஓய்வூதிய அமைப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்.
இந்தப் புதிய திட்டம், முந்தைய அமைப்பை விட இரட்டிப்பு அதிகரிப்பாகும். 2024ம் ஆண்டு நிலவரப்படி ஒரு குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இரட்டை குழந்தை பெற்றெடுத்தால் ரூ.2 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கருத்தரித்தல் சிகிச்சைக்கான சப்சிடிகளும் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. 39 வயதுக்கு கீழ் பெண்களுக்கு ஆறு முறை வரை IVF (in vitro fertilization) சிகிச்சைக்கு சப்சிடி, 39-45 வயதினருக்கு மூன்று முறை வரை. குறைந்த மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களுக்கு ஒவ்வொரு முயற்சிக்கும் ரூ.4 லட்சம் வரை உதவி. இந்தத் திட்டங்கள் 1,20,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் இதை வரவேற்றுள்ளனர், ஆனால் விமர்சனங்களும் உள்ளன. "பணம் மட்டும் போதாது; குழந்தைப் பராமரிப்பு மையங்கள், பெற்றோருக்கு விடுப்பு நாட்கள், கல்வி செலவுகள் போன்றவற்றில் மேலும் முதலீடு தேவை" என தைவான் பெண்கள் உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. சிலர், "இது இளம் தம்பதிகளுக்கு ஊக்கம் தரும், ஆனால் நீண்டகால தீர்வு அரசியல் மற்றும் சமூக மாற்றங்களில் உள்ளது" என்று கூறுகின்றனர்.
இந்தத் திட்டத்தின் பட்ஜெட் NT$30 பில்லியனுக்கும் மேல் (ரூ.970 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது. தைவான் அரசு, "இது தேசிய பாதுகாப்புக்கான முதலீடு" என வலியுறுத்துகிறது. தைவானின் இந்த அறிவிப்பு, ஆசியாவில் பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: தொடர் தொழில்நுட்ப கோளாறு.. மோனோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்..!!