இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் மூலம் மேக்ஸர் டெக்னாலஜிஸ் பாகிஸ்தான் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தானில் உள்ள பஹவால்வூர், முரித்கே பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் தங்குமிடங்கள், கட்டிடங்கள் இந்தியாவின் தாக்குதலில் மோசமாக சேதமடைந்துள்ளன.

ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகளை குறிவைத்துதான் இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு விமானத்தாக்குதல்களை நடத்தியது. மேலும் பஹவால்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் சுபாஹான் அல்லா மசூதியும் மோசமாக குண்டுவெடிப்பில் சேதமடைந்தது செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பந்தாடப்பட்ட பாக்., இந்தியா கொடுத்த அடிக்கு வருத்தம் தெரிவித்த சீனா..!
கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பகுதயில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி்ச் சூட்டில் 26 அப்பாவி பயணிகள் கொல்லப்பட்னர். இதற்குப் பதிலடியாகவே இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையில் இறங்கி நேற்றுமுன்தினம் பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியது.

இந்திய ராணுவத்திந் கலோனெல் சோபியா குரேஷி நேற்று கூறுகையில் “பாகிஸ்தானில் உள்ள பஹவால்பூரில் உள்ள மார்கஸ் சுபஹானல்லா மசூதி இந்திய குண்டுவெடிப்பில் முற்றிலும் சிதைந்துவிட்டது. ஜெய்ஷ் இ முகமது தலைமை அலுவலகத்தை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் இந்த மசூதியும் சேதமடைந்தது. இந்த பகுதியில்தான் 2015ம் ஆண்டிலிருந்து ஜெய்ஷ் இ முகமது அலுவலகம் இங்கு இயங்கி வருகிறது. இங்குதான் தீவிரவாதிகள் ஆள் சேர்ப்பு, பயிற்சி, மூளைச்சலவை, தாக்குதலுக்கான திட்டம் ஆகியவை உருவாக்கப்படும்.

இது தவிர ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், துணைத் தலைவர் முப்தி அப்துல் ராப் அஸ்கர், மவுலானா அமர், மசூத் ஆசாரின் குடும்ப உறுப்பினர்கள் வீடுகளும் இந்தப் பகுதியில்தான் இருந்தது. இதில் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொல்லப்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்தார். முர்டிகே பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கட்டிடங்கள் பல இருந்தன. ஆனால், இந்தியாவின் தாக்குதலுக்குப்பின் முர்திகே பகுதியில் புகைப்படங்களை பார்த்தபோது அங்கு கட்டிடங்கள் இடிந்திருந்தது தெரியவந்தது.

முர்திகே பகுதியில் உள்ள மார்கஸ் தைபா என்பது கடந்த 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பில் சேர்பவர்களுக்கு பயிற்சி வசதி, ஆயுதப் பயிற்சிகள் இங்கு தான் நடக்கும். ஆண்டுக்கு 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மார்கஸுல் பயிற்சிக்காக சேர்கிறார்கள், இந்த மார்கஸிந் நோக்கம் ஆண்டுதோறும் தீவிரவாதிகளை உருவாக்குவதுதான். இந்திய குண்டுவெடிப்பில் சேதமடைந்த மசூதியும், ஒரு விருந்தினர் மாளிகையையும் கட்டுவதற்காக ஒசாமா பின்லேடன் ரூ.1 கோடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பாக். தீவிரவாதிகளை இந்தியா கண்டறிந்தது எப்படி..? 'ஆப்ரேஷன் சிந்தூர்' வெற்றிக்கு உதவிய ‘என்டிஆர்ஓ’ என்றால் என்ன?