அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தனது வரிவிதிப்பு மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் மேம்படும் என கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அங்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. உண்மையில் அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்து வருகிறது. அமெரிக்க அரசாங்கம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வரிகள் மூலம் லாபம் பார்த்து வர, ஒரு பக்கம் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.
வரிவிதிப்பு எப்படி வேலை செய்யும்?
அது பொதுவாக எதற்காக விதிக்கப்படுகிறது என்று பார்ப்போம். உதாரணத்திற்கு அமெரிக்கா இந்தியாவிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது இந்தியாவுக்கு பணம் அளிக்க வேண்டி இருக்கும். இப்படி உள்ளூரை விட்டுவிட்டு வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும்போது உள்ளூர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உள்ளூர் தொழிலாளர்களை பாதுகாக்க சில நேரங்களில் அரசாங்கங்கள் விளையாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது சுங்க வரிகளை விதிக்கின்றன. இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்துகிறது. இறக்குமதிகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் உள்ளூர் தொழில்கள் மற்றும் பணிகள் குறைவான போட்டியை எதிர்கொள்கின்றன.
இதையும் படிங்க: “அதெல்லாம் முடியாது...” ஒரே வார்த்தையில் டிரம்பின் மூக்கை உடைத்த இந்தியா... மிரட்டலுக்கு மாஸ் பதிலடி...!
அதாவது, உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து நாட்டிற்குள்ளேயே அதிக பணம் இருக்க வழிவகை செய்கிறது. ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் வரிகள்
விதிப்பதால் இறக்குமதிகள் குறைந்து உள்ளூர் பொருளாதாரம் வலுவாகும். ஆனால் இந்த கோட்பாடு அமெரிக்காவில் நிஜமாகவில்லை என்பதுதான் உண்மை. இறக்குமதிகள் தொடர்ந்து அதிகரித்ததால் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு 129 புள்ளிகளில் தொடங்கிய அமெரிக்க டாலர் குறியீடு ஜூன் மாதத்திற்குள் 120 ஆக குறைந்தது. கடந்த ஆண்டு இதன் மதிப்பு அதிகரித்தது. அதே நேரம் 2023ல் ஒப்பிட்ட அளவில் இந்த புள்ளிகள் நிலையாகவே இருந்தன. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சரிவு 1970களிலிருந்து ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும்.
இது எப்படி நடந்தது?
முதலில் வரிகள் நாணயத்தின் மதிப்பை வலுப்படுத்த வேண்டும். இதை ஆரம்பத்தில் இருந்து சரியாக செய்தால் அது உங்கள் தயாரிப்புகளுக்கு அதிகப்படியான தேவையை உருவாக்கும். ஆனால் அதற்கு பதிலாக டாலரின் மதிப்பு சரிவதை கண்டு அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதற்கான முதல் காரணம் அமெரிக்க பொருளாதார கொள்கை மீதான நம்பிக்கை இழப்பு. டாலர் மதிப்பு குறைவது என்பது அடிப்படையில் அனைத்து அமெரிக்க சொத்துக்களையும் விற்பனைக்கு உள்ளாக்குவது போல. இதனால் வெளிநாட்டு நாணைய அடிப்படையில் அமெரிக்க பொருட்கள் மலிவானதாகின்றன.
இந்த சூழலில் அமெரிக்க சொத்துக்களை வாங்குவதில் மக்கள் ஆர்வமாக இல்லாததால் சொத்துக்களை விற்பனை செய்ய வைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பொதுவாக அதிக வரிகள் விதிக்கப்படும் போது இறக்குமதிகள் குறையும். ஆனால் மாறாக அமெரிக்கா இன்னும் அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. காரணம் சர்வதேச வணிகத்தில் உள்ள போட்டித்தன்மை. அமெரிக்காவில் உற்பத்தி செலவுகள் அதிகம் என்பதோடு உழைப்புக்கான ஊதியமும் அதிகம் கொடுக்க வேண்டி இருக்கும். எனவே வரிகள் போடப்பட்டாலும் நுகர்வோர், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் மலிவான பொருட்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்காவுக்கு வரிகள் மூலம் சுமார் 50 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 4 லட்சத்து 15,000 கோடி ரூபாய் வருவாய் வந்தது. இதுவே 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 100 பில்லியன் டாலராக அதாவது 8 லட்சத்து 30,000 கோடி என உயர்ந்தது. 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 300 பில்லியன் டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்கவாட் பெசன்ட் கூறியிருந்தார்.
இதனால் எதுவுமே செய்யாமல் பலனை அனுபவிக்கலாம் என பார்த்த அமெரிக்காவிற்கு, அந்நாட்டு அதிபரின் முடிவு முற்றிலும் ஆப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவுக்கு அதிக வருவாய் கிடைப்பது உண்மைதான். ஆனால் இது அதிக வரி விதிப்புகளால் கிடைக்கும் வருவாய். எந்த வரியை அதிகரித்தாலும் அரசுக்கு வருவாய் கிடைக்கும். பொதுவாக அதிபர்கள் தொலைக்காட்சியில் நான் இவ்வளவு வரியை உயர்த்தி இருக்கிறேன். நாம் அனைவரும் இனி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கூற மாட்டார்கள். நுகர்வோர்களாகிய நாமும் வணிகங்களும் தான் இந்த வரிகளை செலுத்துகிறோம். அமெரிக்காவுக்கு விழுந்த அடுத்த அடி புதிய வேலைகளை உருவாக்குவது.
வேலை வாய்ப்பு குறைந்தது?
ட்ரம்பின் வரிகள் வேலைகளை பாதுகாக்கும் ஏன் பல வேலைகளை உருவாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. கடந்த மே மாதத்தில் 1,44,000 வேலைகள் சேர்க்கப்பட்டன. அதை தொடர்ந்து ஜூன் மாதத்தில் 1,47,000 வேலைகள் சேர்க்கப்பட்டன. ஆனால் ஜூலை இது தொடர்பான அறிக்கை வெளியான போது கணிக்கப்பட்ட 1, லட்சத்து 15,000 வேலை வாய்ப்புகளை விட மிக குறைவாக 73,000 வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. இது ட்ரம்பின் வரிக்கொள்கைகளால் ஏற்பட்ட தோல்வியைக் காட்டுகிறது.
அதிபர்களின் முட்டாள் தனமான முடிவுகள்:
1980களில் சர்க்கரை மீது போடப்பட்ட வரிகள் இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை விலையை அதிகமாக்கியது. இதனால் விலைகள் உயர்ந்து கொக்ககோலா நிறுவனம் செலவுகளை குறைக்க சர்க்கரையை தவிர்த்து ப்ரூக்டோஸ் அளவு அதிகம் கொண்ட கான் சிறப்பிற்கு மாறியது. 2002 ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் அமெரிக்க உற்பத்தியாளர்களை பாதுகாக்க எக்குக்கான வரிகளை விதித்தார். ஆனால் இது எதிர்விளவை ஏற்படுத்தியது.
ஆட்டோமொபைல் மற்றும் கட்டுமானம் போன்ற எக்கு பயன்படுத்தும் தொழில்கள் வேலைகளையும் லாபத்தையும் இழந்தன. அவ்வளவு ஏன்?, கடந்த முறை அதிபராக இருந்த போது டோனால்ட் ட்ரம்ப் சீன பொருட்கள் மீது வரிகள் விதித்து வர்த்தக போரை தொடங்கினார். சீனா பதிலடி கொடுக்கும் வகையில் அதுவும் வரிகளை விதித்தது. இதனால் விலைவாசி உயர்ந்து அமெரிக்க ஏற்றுமதிகள் குறைந்தன. ஆனால் இந்த முறை இது மிகவும் மோசமாகவே இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். குறுகிய காலத்தில் அதிக வருவாயை காண்பித்து இதனை வெற்றி என்று கூறலாம். ஆனால் பொருளாதாரத்தை அவ்வளவு எளிதாக அணுகிவிட முடியாது. வரிகளை மட்டும் இங்கு பார்க்க கூடாது. அதனுடன் வரும் விளைவுகள் தாக்கங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் தெலுங்கு தேசம் MLAக்கள் அட்ராசிட்டி!! தீராத தலைவலியில் சிக்கி தவிக்கும் சந்திரபாபு!!