சர்வதேச பண நிதியத்தில் நிர்வாக இயக்குநராக இருந்த இந்தியாவின் கே.வி. சுப்பிரமணியத்தின் பதவிக்காலம் முடியும் முன் அதாவது 6 மாதங்களுக்கு முன்பே மத்திய அரசு அவரை திரும்ப அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை இல்லை என்றாலும், தி இந்து (ஆங்கிலம்) நாளேடு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஐஎம்எப் இயக்குநராக 3 ஆண்டுகளுக்கு கே.வி.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். 2022ம் ஆண்டு ஐஎம்எப் இயக்குநராக நியமிக்கப்பட்ட சுப்பிரமணியன் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிகிறது. ஆனால், 6 மாதங்களுக்கு முன்பாகவே மத்திய அரசு அவரை திரும்ப அழைத்துள்ளது. இதன்படி ஏப்ரல் 30, 2025லிருந்து சுப்பிரமணியன் மீது மத்திய அமைச்சரவை நியமனக் குழு பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும். சுப்பிரமணியனுக்குப் பதிலாக விரைவில் புதிய இயக்குநரை மத்திய அரசு நியமிக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: முடிச்சுவுட்டீங்க போங்க.. பாகிஸ்தானுக்கு எழவே முடியாத அடி.. செக் வைத்த இந்தியா..!

சுப்பிரமணியத்தை மத்திய அரசு திரும்ப அழைத்தது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ஐஎம்எப் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை குறித்து சுப்பிரமணியன், கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது, இதனால் அவை பலதரப்பு நிறுவனத்தின் தாழ்வாரங்களில் சரியாகப் போகவில்லை. அது மட்டுமல்லாமல் சுப்பிரமணியன் சமீபத்தில் அவர் எழுதி வெளியிட்ட “இந்தியா@100” என்ற நூலுக்கு விளம்பரம், ஊக்கச்சலுகைகள் குறித்து சட்டவிரோதமாக இருந்ததால் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

சர்வதேச பண நிதியத்தில் 25 இயக்குநர்கள் உறுப்பு நாடுகளால் தேர்வு செய்யப்பட்டு அ னுப்பி வைக்கப்பகிறார்கள். அந்த வகையில் மத்திய அரசுக்கு 17-வது பொருளாதார ஆலோசகராக இருந்த சுப்பமிரமணியன் அங்கிருந்து ஐஎம்எப்-க்கு அனுப்பப்பட்டார்.
ஐஐடி காரக்பூரில் படித்த சுப்பிரமணியன், ஐஐஎம் கொல்கத்தாவில் எம்பிஏ முதுநிலை பட்டமும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் சுப்பிரமமணியந் பெற்றவர். பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி, ரிசர்வ் வங்கி உள்ளிட்டவற்றில் பல உயரிய பொறுப்புகளில் சுப்பிரமணியன் இருந்தார்.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் “ஐஎம்எப் இயக்குநராக இருந்த கேவி. சுப்பிரமணியை திரும்ப அழைக்கும் முடிவுக்கு நியமனங்களுக்கான கேபினெட் குழுஒ ப்புதல் அளித்துவிட்டது. இந்த உத்தரவு ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிகிறது, சுப்பிரமணியனுக்கும் பதவிக்காலம் நவம்பரில்முடிகிறது. இவர் பதவியிலிருந்து திரும்ப அழைத்ததற்கு எந்த சிறப்புக் காரணமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இதுக்குத்தான் காத்திருந்தோம்.. மோடி அரசுக்கு ராகுல் காந்தி, காங்கிரஸ் பாராட்டு..!