கோவிந்தசாமி என்பவர் 2011 ஆம் ஆண்டு ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தார். 2011 பிப்ரவரி 1 அன்று எர்ணாகுளம்-ஷொரணூர் பயணிகள் ரயிலில் 23 வயது பெண்ணான சௌமியாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் பயணிகள் ரயில்களில் பாதுகாப்பு குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தியது.
இந்த வழக்கில் கோவிந்தசாமி கைது செய்யப்பட்டார். அவருக்கு கீழ்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற கோவிந்தசாமி கேரள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

தற்போது, அவர், கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இன்று அதிகாலை கண்ணூர் சிறையில் இருந்து கோவிந்தசாமி தப்பி ஓடியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கைதி கோவிந்தசாமி தப்பிய ஓடியதை அடுத்து கேரளா முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: "அபிராமி குற்றவாளி"... தகாத உறவிற்காக குழந்தைகளைக் கொன்ற கொடூர சம்பவத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் பணியை முடுக்கி விட்டுள்ளனர். தான் அடைக்கப்பட்டிருந்த சிறை அரையின் கம்பியை வளைத்து அவர் வெளியேறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறைசுவரை தாண்டி குதிக்க ஆடைகளை ஒன்றுடன் ஒன்று கோர்த்து அவர் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கிணற்றில் பதுங்கி இருந்த கோவிந்தசாமி பிடிபட்டார். போலீசார் அவருக்கு தர்ம அடி கொடுத்து அழைத்துச் சென்றனர். சிறையில் இருந்து தப்பித்து சுமார் ஆறு மணி நேரம் போலீசருக்கு தண்ணி காட்டிய கைதியின் நடவடிக்கையால் பதற்றம் ஏற்பட்டது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கண்ணூர் மத்திய சிறை ஒரு முக்கியமான சிறைச்சாலையாகும். இது உயர் பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ஒரு மத்திய சிறையாக செயல்படுகிறது. இந்த சிறை முக்கியமாக குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள் மற்றும் ஆயுள் தண்டனை பெற்றவர்களை அடைக்கப் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ள இந்த சிறையில் இருந்து கைதி தப்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பாராளுமன்றத்தில் கால் பதிக்கும் கமல்..! ஒலிக்கப்போகும் கணீர் கன்னிப்பேச்சு..!!