அதிமுகவில் முகவரி, விலாசம் பெற்றவர்கள் எல்லாம் அதிமுகவை கைவிடும்போதெல்லாம். அதிமுக தொண்டர்களும் ,தமிழக மக்களும் தங்கள் இதயங்களில் சுமந்து அதிமுகவிற்கு வெற்றியை பரிசாக தந்துள்ளார்கள்இதுதான் அதிமுகவின் 54 ஆண்டுகால வரலாறு என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கருத்து.
செங்கோட்டையன் த வெகவில் இணைந்துள்ளது குறித்து கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மறைமுக மிக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலிலே அரசியல் விழிப்புணர்வு நடைபெற இருக்கிறது அதே விழிப்புணர்வு 2026 சட்டமன்ற தேர்தலில் இங்கே தமிழக மக்களுக்கு ஏற்படுமா ? ஏற்பட்டிருக்கிறதா என்கிற விவாதம் நடந்து கொண்டிருந்தாலும் இங்கே தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது நமக்கு புதிய நம்பிக்கை ஏற்படுத்தி குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள்
இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே மக்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகள் ஆயிரம்,ஆயிரம் நம் கண் முன் களத்திலே நிற்கிறது ஆனால் அதையெல்லாம் மடைமாற்றம் செய்கின்ற வகையிலே ஆளுகிற தரப்பு பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உட்கட்சி ஜனநாயகத்தை வைத்து மக்கள் பிரச்சனைகளை எல்லாம் திசை திருப்புகிறது என்கிற ஒரு நிலையை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இதையும் படிங்க: #BREAKING: தவெகவில் ஏன் இணைந்தேன்... உண்மையைப் போட்டு உடைத்து செங்கோட்டையன்...!
ஜனநாயகத்தின் பாதுகாவலராக எடப்பாடியார் இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கல்லுக்குள் இருக்கிற தேரைக்கு உணவு அளிக்கிற கடவுளை போல, உழைக்கின்ற உண்மையான லட்சக்கணக்கான விசுவாச தொண்டர்களுக்கு பொறுப்புகள் வழங்கி, பதவிகள் வழங்கிய அங்கீகாரம் வழங்கி வருவதை ஊடக வெளிச்சத்திலே இருந்து இன்றைக்கு நாம் அதை முழுமையாக கொண்டு வரவில்லை.
வளர்ந்த இயக்கத்திலும், வளர்ந்த இயக்கத்திலும் கருத்து வேறுபாடு ஏற்படுவது காலங்காலமாக நடைபெறும் ஜனநாயக பண்பு. இன்றைக்கு ஆளும் திமுக அரசு மக்கள் பிரச்சினைகளை பற்றி சிந்திக்கவில்லை போதை பொருள்நடமாட்டம் அதிகரித்துக் கொண்டு வருகிறது பாலியல் வன்கொடுமைகள் தடுத்து நிறுத்த முடியாவில்லை இன்றைக்கு குடும்ப ஆட்சியின் வாரிசு அரசியலுக்கு மகுடம் சூட்டுவதற்காக இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
இன்றைக்கு விளம்பர வெளிச்சத்தில் இருந்து ஜனநாயகத்தை இருட்டிலே தள்ளிவிட்டு இருக்கிற சர்வாதிகாரத்திற்கு நாம் பாடம் வேண்டும் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய ஒவ்வொருவரும் விழித்து விட வேண்டிய தருணம்.
மக்களுக்கான பிரச்சினைகள் களத்திலே தலைவிதித்து ஆடிக் கொண்டிருக்கிறது ஆனால் இங்கே உட்கட்சி ஜனநாயகத்தினுடைய கருத்துக்களை வைத்து விவாதங்கள் நடத்திக் கொண்டு இதை நாம் எங்கே போய் சொல்லுவத
54 ஆண்டுகள் மக்களுக்காக சேவை செய்து சாதியற்ற சமதர்ம கடைபிடித்து மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து வெற்றி பயணம் மேற்கொண்டு வரும் இந்த இயக்கத்திற்கு விவாதம் மூலம் வேகத்தடையை ஏற்படுத்த நினைத்தால் அது நடுக்காது.
இன்றைக்கு எடப்பாடியார் இந்த இயக்கத்திற்காக அர்ப்பணித்து உழைத்து வருகிறார் இன்றைக்கு நாம் அனைவரும் எடப்பாடியாரை பின்தொடர நேரம் வேண்டும் ஆகவே உண்மையான ஜனநாயகத்தை காத்திட இளைய சமுதாயமே நீ விழித்துக் கொள்ள வேண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.
இது அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் ஜனநாயகம் காக்க எடப்பாடியார் வழியில் நாம் பயணிக்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்த ஒரு இயக்கம் அதிமுக இன்றைக்கு பீகார் அரசியல் மக்களை மெய்சிலிர்க்க வைக்கிறது அங்கே ஒரு குடும்பத்தில் ஆட்சி, கட்சி பிடியில் இருந்தது அதன் நிலை என்ன என்று தெரிந்தது
பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் 14ஆண்டுகள் ஆட்சி செய்த போது அங்கேவன்முறை கலாச்சாரம் பெண்களுக்கு எதிரான தாக்குதல் எல்லாம் தனது காட்டுத் தர்பார் ஆட்சி நடைபெற்றது ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தலில் அந்த கசப்பான அனுபவங்களை மக்கள் நினைத்து சரியான பாடத்தை கற்பித்தார்கள் அதேபோன்றுதான் தமிழகத்தில் நடைபெறும் இந்த ஆட்சி குடும்ப ஆட்சிக்கும் மக்கள் முடிவு கட்டுவார்கள்
பீகார் மாநிலத்தில் எப்படி விழிப்புணர்வு ஏற்பட்டதோ அதேபோல தமிழகத்தில் நிச்சயம் விழிப்பு ஏற்படும் 2026 ஆண்டில் இளவரசருக்கு மகுடம் சூட்ட ஸ்டாலின் நினைக்கிறார் ஆனால் கள நிலவரம் திமுகவிற்கு அதள பாதளத்தில் உள்ளது இன்றைக்கு விளம்பரம் என்ற போர்வாலை நம்பித்தான் திமுக உள்ளது அது மக்களிடத்தில் எடுபடாது..
ராமர் வனவாசத்திற்கு சென்றாரே அது ராமர் செய்த தவறா? யாரோ செய்த தவறுக்கு பொறுப்பேற்று அந்த தீர்ப்புக்கு தலைவணங்கி சென்றாரே அதனால் அவர்…
இதையும் படிங்க: செம்ம ட்விஸ்ட்..! விஜயுடன் செங்கோட்டையன்… EPS- ன் SUDDEN ரியாக்ஷன்..!