ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிலகலூர்பேட்டை மண்டலம் வேலூரு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு ஆட்டோவில் பிரகாசம் மாவட்டம் கொண்டமஞ்சுளூரில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஆட்டோவில் சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
ஆட்டோ சிலகலூரிபேட்டை அடரோடு அருகே வந்தபோது விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டுருந்த தனியார் டிராவல்ஸ் பேருந்து அதிவேகமாக செந்து ஆட்டோ மீது மோதியது. உடனடியாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததால் அவர்களை குண்டூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!
உயிரிழந்தவர்கள் போந்தா பாபு, மனெம்மா, சம்பூர்ணம்மா, லட்சுமி, கங்கம்மா மற்றும் மரியம்மா என மேலும் சிலரிம் பெயர் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணங்கள் மற்றும் பேருந்து டிரைவரின் கவனக்குறைவு என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: கண் இமைக்கும் நேரத்தில் கோரம்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!