வளைகுடா பிராந்தியத்தின் அமைதியின்மை மற்றும் கடற்கொள்ளையர் கண்காணிப்புக்காக, பிரிட்டன் போர்க்கப்பல் அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டன. அதில் இங்கிலாந்தின் ராயல் கடற்படையைச் சேர்ந்த F-35 போர் விமானம் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி அவசரமாக தரையிறங்கியது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் ஒருசில தொழில்நுட்ப கோளாறு காரணாமக விமானம் தரையிரக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்து அனுமதி பெற்றனர். பாதுகாப்பு சரிபார்ப்புகள் முடிந்த பின், விமானம் மீண்டும் ரோந்து கப்பலை அடைய அனுமதிக்கப்பட்டது. விமானத்தை ஆய்வு செய்ததில் ஹைட்ராலிக் பழுதானது தெரிந்தது. அதை சரி செய்ய மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட ஒரு சிறிய ராயல் கடற்படை குழு திருவனந்தபுரம் வந்தது.
ஆனால், கடினமான சிக்கல் காரணமாக விமானத்தை சரி செய்யும் முயற்சி தோல்வியடைந்தது. ஒரு நாட்டின் போர் விமானம் திடீரென மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அனுமதிக்கப்படுவது, 2 வாரங்களுக்கு மேல் நிறுத்தப்படுவது மிகவும் அரிதான ஒன்று.
இதையும் படிங்க: கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?
இந்த நிலையில் இரண்டு வாரங்களாக சிக்கலைத் தீர்க்க முடியாததால், விமானத்தை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்புவதே சிறந்தது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இயந்திர கோளாரால் நிறுத்தப்பட்ட விமானத்தை பழுதுபார்த்து எடுத்துச் செல்வதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதனால், மற்றொரு பெரிய ராணுவ சரக்கு விமானத்தில் அதனை இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டனர்.
ஆனால் F-35 விமானத்தின் இறக்கைகள் சுமார் 11 மீட்டர் என்றாலும், C-17 சரக்கு இருப்பு அகலம் 4 மீட்டர் மட்டுமே. இதனால் விமானத்தை நேரடியாக உள்ளே ஏற்றுவது சாத்தியம் இல்லை. எனவே, அதன் இறக்கைகளைப் பிரித்து விமானத்தை பாகங்களாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானத்தின் இறக்கைகளைப் பிரிப்பது மிகவும் சிக்கலான செயல்முறை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், இவ்வாறு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில், அமெரிக்காவிலும் தென் கொரியாவிலும் F-35 விமானங்களின் இறக்கைகள் இதேபோன்ற முறையில் அகற்றப்பட்டு வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த செயல்முறை ஒரு சில நாட்களில் முடிக்கப்பட்டு, விமானம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
F-35 உலகிலேயே விலையுயர்ந்த போர் விமானங்களில் ஒன்று. 5வது ஜெனரேஷன் ஸ்டெல்த் ஃபைட்டர் விமானங்களில் (stealth Fighter Jet) இதுவே விலை உயர்ந்தது. stealth Fighter Jet என்றால் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைந்திருந்து தாக்கும் விமானம். இவற்றை ரேடாரில் எளிதாக கண்டுபிடித்துவிட முடியாது. F-35 Lightning II விமானங்களில் F-35A, F-35B, F-35C என மூன்று வகை உள்ளது.

இவை அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனத் தயாரிப்பாகும். இவற்றுள் F-35B மிகவும் குறுகிய ஓடுபாதையில் மேலே ஏறவும், செங்குத்தாக இறங்கவும் முடியும். இந்த விமானங்களின் விலை ரூ.930 கோடி முதல் ரூ.1,100 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகள் இந்த விமானத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியாவிடம் இவை கிடையாது.
இதையும் படிங்க: விமான விபத்துல செத்தவங்கள இப்படியுமா பேசுவீங்க! கேரள நர்ஸை விமர்சித்த துணை தாசில்தாருக்கு காப்பு..!