தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் மூன்று பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக மார்கழி மற்றும் தை மாதங்களில் வருடம் தோறும் சென்று வருகின்றனர்.
அந்த வகையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் புறப்பட்டு திருச்செந்தூரில் இருந்து இருக்கன்குடி நோக்கி யாத்திரையாக தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளனர்.இன்று மாலையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்கு சாலை அருகில் உள்ள பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது.
இதையும் படிங்க: திக்... திக்... சம்பவம்...!! - திடீரென கழன்று ஓடிய கார் டயர் - ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய அமைச்சர்...!
இந்த கோர விபத்தில் வீரபாண்டிய பட்டினத்தைச் சேர்ந்த சுந்தரராணி (60), இசக்கியம்மாள்( 55),கரம்விளையைச் சேர்ந்த கஸ்தூரி (55) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயர்ந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்ட பக்தர்களையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை மணியாச்சி சரக டிஎஸ்பி அருள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான தஞ்சாவூரைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா: 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..!!