சமீப காலமாக உலகப் பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு டாலருக்கு 96.11 ரூபாய் என்ற அளவைத் தொட்டிருக்கும் இந்த நிலை, கச்சா எண்ணெய் விலையின் கூர்மையான உயர்வால் ஏற்பட்டுள்ளது.
இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு இது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்கள், தொழில்துறை மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதன் எதிரொலியை உணரத் தொடங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களில் மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம், குறிப்பாக அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட தடை ஆகியவை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல், சில சமயங்களில் 110-120 டாலர் வரை சென்றுள்ளது. இந்தியா தன் எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கு மேல் இறக்குமதி செய்வதால், டாலர் தேவை அதிகரித்து ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. ஒவ்வொரு 10 டாலர் உயர்வும் இந்தியாவின் இறக்குமதி செலவில் பல பில்லியன் டாலர்களை அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் தயார்! எரிபொருள் இருப்பு குறித்து மத்திய அமைச்சர் உறுதி!
இந்த வீழ்ச்சியின் நேரடி விளைவுகள் பல. முதலீட்டாளர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இருந்து பணத்தை வெளியேற்றியதால், பங்கு விலைகள் சரிவடைந்தன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கச்சா எண்ணெய் விலை உயா்வால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.11 ஆக குறைந்திருக்கும் நிலையில் முதலீட்டாளா்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை மூடல்: எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வு.. ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலை தற்காலிக மூடல்..!!