நாக்பூரைச் சேர்ந்த பிரபல தேநீர் விற்பனையாளரான டோலி சாய்வாலா, தனது தனித்துவமான தேநீர் தயாரிக்கும் பாணியால் சமூக ஊடகங்களில் புகழ் பெற்றவர். இவரது டீக்கடை இப்போது இந்தியா முழுவதும் பிரான்சைஸ் முறையில் விரிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் பரவலாக வரவேற்கப்பட்டு, இந்தியாவின் முதல் வைரல் ஸ்ட்ரீட் பிராண்டாக டோலி சாய்வாலா உருவாகி வருகிறார்.

டோலி சாய்வாலாவின் டீக்கடை மூன்று விதமான பிரான்சைஸ் விருப்பங்களை வழங்குகிறது: தள்ளுவண்டி முதல் கஃபே வரையிலான மாதிரிகள். இதன்மூலம், நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் அவரது தனித்துவமான தேநீரை ரசிகர்கள் அனுபவிக்க முடியும். நாக்பூரில் தொடங்கி, பிரபலமான பலருடன் இணைந்து பணியாற்றிய டோலி, தனது பிராண்டை தேசிய அளவில் விரிவாக்குவதற்கு இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் கால் பதித்தது டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரும்!! ட்ரம்ப் வார்னிங்கை மீறுவாரா எலான்?
இந்த முயற்சி, உள்ளூர் தொழில்முனைவோருக்கு வணிக வாய்ப்புகளை வழங்குவதுடன், இந்திய தெரு உணவு கலாசாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டோலியின் தேநீர் தயாரிக்கும் பாணி, அவரது கவர்ச்சிகரமான ஆளுமையுடன் இணைந்து, இளைஞர்கள் மற்றும் தேநீர் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் பல நகரங்களில் டோலி சாய்வாலாவின் டீக்கடைகள் விரைவில் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம், இந்தியாவில் தெரு வணிகத்தை நவீனமயமாக்குவதற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என பலர் நம்புகின்றனர்.

சில முக்கிய நகரங்களில்தான் இந்த வாய்ப்பு முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தார் டோலி. விண்ணப்பப் படிவத்தின் தகவல்படி, டோலி சாய்வாலா மூன்று விதமான வடிவங்களில் அமைக்கப்பட உள்ளது. அதாவது, தள்ளுவண்டி கடை அமைக்க ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும். அதேபோல், கடை அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை செலவாகும். முழுமையான கஃபே வடிவில், உயர்தர வசதிகளுடன் அமைக்க ரூ.39 லட்சம் முதல் ரூ.43 லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 விருப்பங்களின் மூலம், முதலீட்டு திறன் மற்றும் இட வசதிகளின் அடிப்படையில் விருப்பப்பட்ட நபர்கள் தங்களுக்கு ஏற்ப தேர்வு செய்ய முடிகிறது. மேலும் இந்த அறிவிப்பை வெளியிட்ட இரண்டு நாட்களில் 1,609 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரஷ்யாவில் வேலை வேணுமா! உடனே விசா ரெடி பண்ணுங்க!! 10 லட்சம் பேருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்!!