டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் மூத்த குடிமக்களின் நலனுக்கான முயற்சியாக கண்ணியத்துடன் முதுமை எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், முதியவர்கள் கடந்த காலத்துடன் தொடர்புடையவர்கள் என்றும், எதிர்காலத்திற்கு வழிகாட்டுபவர்கள் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

அனைத்து குடிமக்களும் முதியவர்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவும், அவர்களின் வழிகாட்டுதலை மதிக்கவும், அவர்களின் மதிப்புமிக்க துணையை அனுபவிக்கவும் வலியுறுத்தினார். நமது மூத்த குடிமக்கள் தங்கள் முதுமையை கண்ணியத்துடனும், சுறுசுறுப்புடனும் கழிப்பதை உறுதி செய்வது ஒரு தேசமாக நமது கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடும்பம் மற்றும் சமூகத்தின் சரியான வழிகாட்டுதலுக்கு முதியவர்களின் நல்ல ஆரோக்கியம் அவசியம் என கூறிய அவர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் நடத்தப்படும் அடல் வயோ அபியுதயா யோஜனா, ஆவ்யா, மூத்த குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான முயற்சி என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்த ஆப்பு.? தமிழக ஆளுநருக்கு எதிரான உத்தரவு கேரள ஆளுநருக்கு பொருந்துமா.? உச்ச நீதிமன்றம் விசாரணை!

இன்றைய போட்டி நிறைந்த மற்றும் வேகமான வாழ்க்கையில், மூத்த குடிமக்களின் ஆதரவு, உத்வேகம் மற்றும் வழிகாட்டுதல் நமது இளம் தலைமுறையினருக்கு மிகவும் முக்கியமானது என்றும் இளைய தலைமுறையினர் சிக்கலான சவால்களை எதிர்கொள்ள உதவும் ஏராளமான அனுபவங்களையும் அறிவையும் அவர்கள் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஜனாதிபதி பெயரளவு தலைவர் தான்..! ஜெகதீப் தன்கருக்கு கபில் சிபல் கண்டனம்..!