பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவை முழுமையாக ஆதரிப்பதாக அமெரிக்கா ஏற்கனவே கூறியுள்ளது. இப்போது இந்தியாவும் இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவுடன் பேசியுள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

அவரது தனது எக்ஸ்தளப் பதிவில், ''பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நேற்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் விவாதிதேன். அப்போது, இந்தத் தாக்குதல் குற்றவாளிகள், ஆதரவாளர்கள், திட்டமிடுபவர்களை நீதியின் முன் நிறுத்துவது குறித்து பேசினோம். இரு நாடுகளின் இருதரப்பு ஒத்துழைப்பு, செயல்பாடுகளும் விவாதிக்கப்பட்டன'' எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்குப் பிறகு, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவது ஒரு நேர்மறையான அறிகுறியாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டு எதிரெதிர் நாடுகளும் எந்தவொரு பிரச்சினையிலும் அரிதாகவே இணைகின்றன. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் முழு ஆதரவும் இந்தியாவுடன் இருப்பதாக அமெரிக்கா ஏற்கனவே உறுதியளித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட உலகின் முதல் தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதியும் ஒருவர்.
இதையும் படிங்க: அமித் ஷா கையில் ரெட் ஃபைல்... அமெரிக்கா, சீனாவுக்கு அழைப்பு... பாகிஸ்தான் சம்பவம் லோடிங்..!

தாக்குதல் நடந்த அடுத்த நாளே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். தாக்குதலைக் கண்டித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவளிப்பதாக டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி..! பிரதமர் தலைமையில் கூடியது அமைச்சரவை கூட்டம்..!