தமிழ்நாட்டின் மது விற்பனைத் துறையைத் தனியாகக் கையாளும் அரசு நிறுவனமான டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை (ED) சோதனைகள், தமிழக அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறின. ரூ.1,000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்ததாகக் கூறி மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்தச் சோதனைகள், அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது.
இந்த முறைகேடுகளால் ரூ.1,000 கோடிக்கும் மேல் சட்டவிரோத பணம் உருவாக்கப்பட்டதாகவும், இது டாஸ்மாக் ஒப்பந்தங்களைப் பெற ஊழியர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான சதியில் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர், நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் கே. ராஜசேகர் அமர்வு, ஏப்ரல் 23 அன்று வழக்குகளைத் தள்ளுபடி செய்தது.

இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கேட்டார். அப்போது, டாஸ்மாக்கில் பெருமளவிலான ஊழல் நடைபெற்றுள்ளதாக ஈடி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அரசு நிறுவனத்தில் ஈடு எப்படி சோதனை நடத்த முடியும் என தமிழக அரசு வாதம் முன்வைத்தது.
இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட் உத்தரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது… திமுக வழக்கறிஞர் வில்சன் பரபரப்பு பேட்டி…!
அப்போது, இதுபோன்ற சோதனைகளால் கூட்டாட்சி முறை என்ன ஆவது என்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது யார் எனவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். டாஸ்மாக் சோதனை வழக்கு விசாரணையில் மாநில உரிமைகள் பறிக்கப்படவில்லையா என அமலாக துறைக்கு கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் குறித்து போலி வழக்கா? தீவிரமாக ஆராயப்படும்... சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை...!