இந்தியாவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன் வைப்பதாகவும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. ராகுல் காந்தி வாக்குத்திருட்டு தொடர்பாக உண்மைக்கு புறமான தகவல்களை கூறுவது அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்றும் குற்றம் சாட்டியது. எனவே ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரட்டும்... தேர்தல் ஆணையத்துக்கு அப்ப இருக்கு கச்சேரி! ராகுல் காந்தி திட்ட வட்டம்

இந்த நிலையில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை அடுத்து தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்கட்சிகள் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. தரவுகளுடன் எந்த பதிலையும் தலைமை தேர்தல் ஆணையர் அளிக்கவில்லை என தேஜஸ்வி யாதவ் காட்டமாக தெரிவித்துள்ளார். உயிரோடு இருப்பவர்கள் இறந்தவர்கள் என அறிவித்தது ஏன் என்பதற்கு பதில் அளிக்கவில்லை என்று கூறினார்.
தலைமை தேர்தல் ஆணையர் பாஜக உறுப்பினர் என்றால் அதனை கூறி விடலாம் என்று தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்ததை தலைமை தேர்தல் ஆணையர் படித்துவிட்டு சென்றுள்ளார் என்று குற்றம்சாட்டி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பெரும் பரபரப்பு... 4 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து... தேர்தல் ஆணையத்திற்கு பறந்தது பரிந்துரை...!