தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலையில் கஜனா ஜுவல்லர்ஸ் தங்க ஷோரூம் உள்ளது. இங்கு வழக்கம் போல் ஊழியர்கள் ஷோரூமை திறந்து ஊழியர்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காலை 10.30 மணிக்கு 7 கொள்ளையர்கள் முகமூடி , ஹெல்மெட் அணிந்து துப்பாக்கிகளுடன் ஷோரூமுக்குள் நுழைந்தனர்.
அவர்களைத் தடுக்க முயன்றநிலையில் உதவி மேலாளர் சதீஸ்குமார் கால் தொடையில் துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்தார். மேலும் கொள்ளையர்கள் சி.சி.கேமிரா உள்ள இடத்தில் மற்றொரு துப்பாக்கி சூடு நடத்தி லாக்கர் சாவி கேட்டனர். சாவி கிடைக்காததால் ஷோரூமில் டிஸ்ப்ளேக்கு வைத்திருந்த வெள்ளி நகைகள் சிலவற்றை பையில் வைத்து கொண்டு போலீசார் வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், அங்கிருந்து தாங்கள் வந்த பைக்குகளில் தப்பி ஓடிவிட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து துப்பாக்கி தோட்டாக்களின் விவரங்களை சேகரித்து அங்கிருந்த ஊழியர்களிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தனர். கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த உதவி மேலாளர் சதீஷ்குமாரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: அப்பாடா..!! நிம்மதி பெருமூச்சு விட்ட சீமான்... டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு...!
இந்த கொல்லையில் 7 பேர் பங்கேற்று இருப்பதும், அவர்கள் அனைவரும் பைக்குகளில் வந்திருப்பதும் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர் கொள்ளையர்களை பிடிப்பதற்காக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் லாக்கர் சாவி கிடைக்காததால் தங்க நகைகள் எதுவும் திருடு போகவில்லை.
வெள்ளி நகைகள் மற்றும் திருட போனதாகவும் எவ்வளவு மதிப்பு என்பது குறித்து ஜுவல்லரி நிறுவனத்தினர் தெரிவிக்கும் கொடுக்கும் தகவலை வைத்து முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தில் பட்டப் பகலில் நகை பிரபல நகை கடையில் துப்பாக்கியுடன் கொள்ளையடிக்க கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நாய்கள் மிகவும் அழகான, மென்மையான உயிரினங்கள்.. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பிரியங்கா காந்தி விமர்சனம்..!!