பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்பட்டு இந்தியாவுக்கு எதிராக ஆயுதங்களை வழங்கியதையடுத்து, துருக்கியை நிராகரிக்கும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் துருக்கி பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்த மும்பை ஐஐடி உயர் கல்வி நிறுவனமும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாதிகளையும், அவர்களின் முகாம்கள், கட்டமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவின் எல்லைப்பகுதி கிராமங்கள், மாவட்டங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது, அந்தத் தாக்குதல்களையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இந்தியாவுடனான போரில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து, ட்ரோன்கள், ஆயுதங்களை வழங்கியது துருக்கி என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஆதரவு: துருக்கி பல்கலை. உடன் ஒப்பந்தத்தை ரத்து செய்தது டெல்லி ஜேஎன்யு..!

இந்தியாவுடன் இதற்கு முன்பு நட்புடன் இருந்த துருக்கி, பாகிஸ்தானுடனான போருக்குப்பின் மத்திய அரசு நிராகரித்தது. துருக்கியின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் துருக்கியை இந்தியாவில் பல்வேறு துறைகளும் ஒதுக்கத் தொடங்கின.
அதானி நிறுவனம் பராமரித்து வந்த விமானநிலையங்களில் சரக்குகளை கையாளுதல், பாதுகாப்பு விஷயங்களில் துருக்கி நிறுவனம் செலிபி ஈடுபட்டு வந்தது. இந்தியா-துருக்கி இடையே உரசல் ஏற்பட்டு, பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய அரசு மறுத்த தகவல் வந்தததையடுத்து, அதானி நிறுவனம் துருக்கி நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. திருவனந்தபுரம், குஜராத்தில் உள்ள விமான நிலையங்களிலும் துருக்கி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் துருக்கி பல்கலைக்கழகத்துடன் செய்திருந்த ஒப்பந்தத்தையும் திடீரென ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து ரூர்கே ஐஐடி, சண்டிகார் பல்கலைக்கழகமும் துருக்கி பல்கலைக்கழகத்துடன் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்தன. சமீபத்தில் மும்பை ஐஐடி உயர்கல்வி நிறுவனமும் துருக்கி பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
மும்பை ஐஐடி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்தியில் “தற்போதுள்ள புவிஅரசியல் சூழலில் துருக்கி சம்பந்தப்பட்டுள்ளது. ஆதலால் அடுத்த நோட்டீஸ் வரும்வரை துருக்கி பல்கலைக்கழகத்துடன் செய்திருந்த அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.
துருக்கியில் உள்ள பல கல்வி நிறுவனங்களில் இருந்து பேராசிரியர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், இங்கிருந்து பல பேராசிரியர்கள் துருக்கியிலும் பரிமாற்றத் திட்டத்தில் பணியாற்றுகிறார்கள். அந்தத் திட்டமும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்பட்டது இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் வெளிப்படாக, துருக்கியில் உள்ள இன்னோ பல்கலைக்கழகத்துடன் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஐஐடி ரூர்கே ரத்து செய்துள்ளது.
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்கள் துருக்கியில் உள்ள 23 கல்வி நிறுவனங்கள், அசர்பைஜன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தன. அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஆதரவு: துருக்கி பல்கலை. உடன் ஒப்பந்தத்தை ரத்து செய்தது டெல்லி ஜேஎன்யு..!