பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அணு ஆயுதங்கள் தொடர்பான பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பேச்சு குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தபோது பாகிஸ்தான் ராணுவத் தளபதி தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் குறித்து தங்கள் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்வது பாகிஸ்தானின் முக்கிய வர்த்தகம் என்ற கருத்து சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறுகிறது.
இதையும் படிங்க: அமைதியா போக மன்மோகன் சிங் அரசு இல்ல.. இது மோடி சர்க்கார்! லோக்சபாவில் அமித் ஷா செய்த வெறித்தனம்..!

இத்தகைய கருத்துக்களில் உள்ளார்ந்த பொறுப்பற்ற தன்மை குறித்து சர்வதேச சமூகம் அதன் சொந்த முடிவுகளை எடுக்க முடியும் என்றும் இது இராணுவம் பயங்கரவாத குழுக்களுடன் கைகோர்த்து இருக்கும் ஒரு மாநிலத்தில் அணுசக்தி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டின் நேர்மை குறித்த நன்கு நிலவும் சந்தேகங்களை வலுப்படுத்துகிறது என்றும் தெரிவித்து உள்ளது.
இந்தக் கருத்துக்கள் நட்புரீதியான மூன்றாவது நாட்டின் மண்ணிலிருந்து இருப்பது வருத்தம் அளிப்பதாக இந்தியா கூறியுள்ளது.
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா என்றும் அடிப்படையாது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டதாகவும், நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இதில் தீவிரவாத நிலைகளை குறிவைத்து இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. தீவிரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டது.
தற்போது பாகிஸ்தானின் ராணுவ தளபதி அணு ஆயுதங்களை வெடிக்க செய்வது தங்களது முக்கிய வர்த்தகம் என்று பேசி இருப்பது தீவிரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது என்ற கருத்துக்கு ஈடு கொடுப்பதாகவே உள்ளதால் சந்தேகம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING: உங்களுக்கு எங்க வலிக்குது.. பாகிஸ்தானை காப்பாத்துறீங்களா? காங்கிரசை பந்தாடிய அமித் ஷா..!