இந்தியாவிற்கும், பிரிட்டனுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் ஜனவரி 2022இல் தொடங்கப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தைகள் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தடைபட்டு கொண்டே இருந்தது. மேலும் இந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியதிலிருந்து பிரிட்டனுக்கு நான்கு வெவ்வேறு பிரதமர்கள் இருந்தனர். இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இரு நாடுகளிலும் தேர்தல் நடைபெற்றன.

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான இருதரப்பு வா்த்தகம் கடந்த 2022-23 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 36 கோடி டாலரிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 134 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான சராசரி வரி 4.2 சதவீதமாக உள்ளது. தற்போது இரு நாடுகளிடையே சராசரியாக ரூ.1.73 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடியும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் போர் பதற்றம்! போர்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு...

இருநாடுகளுக்கும் இடையே 14 சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இறுதி செய்யப்பட்டது. இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்து அவர் தனது எஸ்க் தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருடன் தொலைபேசியில் பேசியிருந்தேன்.

அப்போது, வரலாற்றிலொரு மைல்கல்லாக இந்தியாவும் பிரிட்டனும் தொலைநோக்குடைய இருதரப்புக்கும் பரஸ்பர பயனளிக்கிற தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவும், வர்த்தகமும், முதலீடுகளும், வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும், புத்தாக்கங்களும் நமது பொருளாதாரத்தில் மேலும் ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான இருதரப்பு வா்த்தகம் பத்தாண்டுகளில் இரண்டு அல்லது மூன்று மடங்காக உயா்த்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல் எதிரொலி..! இந்திய ராணுவ இணையதளம் மீது பாக். சைபர் அட்டாக்..!