உலகின் முக்கிய பொருளாதார நாடுகளான ஜி7 அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள நியாகரா பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியமும் பங்கேற்றது. இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தின் புறநடைவில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இருவரும் வர்த்தகம், சப்ளை சேயின்கள், இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை விவாதித்தனர். மேலும், உக்ரைன் மோதல், மத்தியகிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவின் நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு, ஜி7 கூட்டத்தின் இரண்டாவது நாளான நவம்பர் 12 அன்று நடைபெற்றது.
இது குறித்து டாக்டர் ஜெய்சங்கர் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: “இன்று காலை #ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்தது மகிழ்ச்சி. டெல்லியில் நடந்த வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததற்கு நன்றி. வர்த்தகம் மற்றும் சப்ளை சேயின்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி, நமது இருதரப்பு உறவுகளை விவாதித்தோம். உக்ரைன் மோதல், மத்தியகிழக்கு/மேற்கு ஆசிய நிலைமை, இந்தோ-பேசிஃபிக் பிராந்தியம் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ட்ரம்ப் Vs மோடி! ஜெயிக்கப்போவது யார்? மலேசியாவில் அமெரிக்க அமைச்சருடன் ஜெய்சங்கர் மீட்டிங்!

இந்த சந்திப்பு, டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின் நடைபெற்றது. அந்தத் தாக்குதலுக்கு ரூபியோ இரங்கல் தெரிவித்தது இந்தியாவின் சர்வதேச உறவுகளில் ஒரு நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது. ஜெய்சங்கர், கூட்டத்தின் போது கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகளின் அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்.
ஜி7 கூட்டம், உக்ரைன் மோதல், கசா பிரச்சினை, வர்த்தக அழுத்தங்கள், பாதுகாப்பு செலவுகள் உள்ளிட்ட உலகளாவிய சவால்களை விவாதிக்கும் நோக்கத்துடன் நடைபெற்றது. கனடா இந்த ஆண்டு ஜி7 தலைமை தாங்கியுள்ளது. இந்தியா, ஜி7வின் விரிவாக்கப்பட்ட உறுப்பினராக (Outreach Partner) பங்கேற்கிறது. இந்தக் கூட்டம், இந்தியாவின் உலகளாவிய தூதரக உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ' ஆப்ரேஷன் ஸ்பெஷலிஸ்ட்' பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடித்த ஐ.பி.எஸ்!! யார் இந்த சந்தீப் சக்கரவர்த்தி?!