“இந்தா வர்றாரு... அந்தா வர்றாரு...” என வாயில் வடை சுடும் விதமாக விஜயின் கரூர் விசிட் குறித்து தவெகவினர் பரபரப்பு காட்டுகிறார்களோ தவிர, உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைத்த பிறகும் கரூருக்குள் கால் வைக்க முடியாமல் விஜய் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு பின்னணியில் ஒரு முக்கிய விஐபி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் நிதியுதவியை அறிவித்தன. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். முதலில் இந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்த தவெக திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டன.
இதற்காக அனுமதி கோரி விஜய் கரூர் டிஎஸ்பிக்கு மெயில் மூலம் கோரிக்கை மனு அளித்ததாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து உற்சாகமான தவெகவினர் விஜய் நிச்சயம் கரூருக்கு வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். ஆனால் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தையும் பவர்ஃபுல்லான விஐபி ஒருவர் கன்ட்ரோலில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: யாரையும் பலிகடா ஆக்குற அவசியம் எங்களுக்கு இல்ல... பொறுப்பா இருங்க - முதல்வர் ஸ்டாலின்...!
அந்த குடும்பங்களை யார் சந்தித்தாலும், ஆறுதல் சொல்ல வந்தாலும் அந்த விஐபியுடைய அனுமதி இல்லாம அவங்களை அணுக முடியாத அளவுக்கு பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டுருக்காம்.
சமீபத்தில் விஜய் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை வீடியோ கால் மூலம் சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்காக முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியும், தவெக கொள்கைப் பரப்புச் செயலாளருமான அருண்ராஜ் மற்றும் அவரது டீம் கரூரில் முகாமிட்டிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு அந்த முக்கிய புள்ளி சார்பில் கால் செய்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. “அவர்களுக்கு ஏன் அங்கே தங்க இடம் கொடுத்தீர்கள். காலி பண்ண சொல்லுங்கள்” என்றெல்லாம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விரைவில் தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேரில் சந்தித்து நிவாரண தொகை வழங்க உள்ளார் எனக்கூறப்படுகிறது. இதற்காக கரூர் தவெக சார்பில் அந்த ஊரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றினை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி உரிமையாளர் அனுமதியோடு, காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்து கொண்ட அந்த முக்கிய புள்ளி உடனே சம்பந்தப்பட்ட தனியார் மண்டப உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இப்போது அந்த மண்டபத்தை தவெக நிகழ்ச்சி வாடகைக்கு தர முடியாது என அதன் உரிமையாளர் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டு பிரபாகரன் உட்பட மனு போட்ட மூணு பேரும் போலியானவர்கள் என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் விவகாரத்தின் பின்னணியில் கரூர் மாவட்ட அதிமுக மிகப்பெரிய வேலை பார்த்துள்ளது தெரியவந்துள்ளது. மனு தாக்கல் செய்த 3 பேரில் பிரபாகரன் என்பவர் மட்டும் திமுகவுக்கு எதிராகவும், விஜயிடம் ஆதரவு கேட்டும் வீடியோ வெளியிட்டார். அதனை முதன் முதலில் சோசியல் மீடியாவில் பகிர்ந்ததே அதிமுக ஐ.டி. விங்க் தான் எனக்கூறப்படுகிறது. அதேபோல் திமுக பிரமுகர் தான் மிரட்டி வழக்கை வாபஸ் பெற செய்கிறார் என்ற தகவலையும் அதிமுக தான் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரூர் சம்பவம்: தவெக சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும்.. விஜய் அதிரடி உத்தரவு..!!