கேரளாவில் செயல்பட்டு வரும் பிஎல்எம் ஹவுசிங் சொசைட்டியின் நிர்வாக இயக்குநர் பிரேம்குமார், ரூ.5,000 கோடி மோசடி வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரைக் கைது செய்த கேரள போலீசார், தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் செயல்பட்டு வரும் விஎல்எம் ஹவுசிங் சொசைட்டியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, அதன் நிறுவனர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் சுமார் ரூ.500 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பிஎல்எம் ஹவுசிங் சொசைட்டியின் நிர்வாக இயக்குநர் பிரேம்குமாரை நுங்கம்பாக்கத்தில் கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரள அரசியலில் பரபரப்பு..! பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு..! அதிரடி உத்தரவு..!
கேரளா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ரூ.5,000 கோடி வரை மோசடி நடைபெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் பிரேம்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாகத் திருவனந்தபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம் குற்றப்பிரிவு டிஎஸ்பி பென்னி தலைமையிலான போலீசார், சென்னையில் பிரேம்குமாரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரேம்குமார், சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவரைக் கோழிக்கோட்டுக்கு அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிக வட்டி மற்றும் கணிசமான வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஓய்வுபெற்றவர்கள் உள்ளிட்ட பலர் இந்தச் சங்கத்தில் பணத்தை முதலீடு செய்ததாக விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன. முதலீட்டுத் திட்டங்களின் காலம் முடிவடைந்த பின்னரும் சிலரால் தங்களது பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.
மேலும், முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் தனிநபர் கணக்குகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளுக்குத் திருப்பிவிடப்பட்டதாகச் சங்க நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் சென்னையில் உள்ள ரிசார்ட்டுகள், திரையரங்குகள், ஹோட்டல்கள் போன்ற சொத்துகளை வாங்குவதற்கும் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆனைமலையாறு–நல்லாறு திட்டம்! கேரளா செல்ல இருந்த அமைச்சர்கள் திடீர் பயணம் ஒத்திவைப்பு!