காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமலானது. முன்னதாக இந்தியா மீது சுமார் 300க்கும் அதிகமான ட்ரோன்களை கொண்டு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டது. அதே நேரம் இந்தியா மற்றொரு துல்லிய தாக்குதலை மேற்கொண்டது. அதில், பாகிஸ்தானின் ராணுவ விமான தளங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையும் படிங்க: சிந்து நீரை கேட்டு கெஞ்சும் பாக்., இதை நிறுத்தாத வரை தர மாட்டோம்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஜெய்சங்கர்!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக அஜர்பைஜான், துருக்கி நின்றன. இந்தியாவுக்கு இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதவளித்தன. தொடக்கம் முதல் இஸ்ரேல் இந்தியாவுக்கு தனது உறுதியான ஆதரவை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமிர் பராம் இந்தியாவுக்கான ஆதரவை மீண்டும் தெரிவித்திருகிறார்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமிர் பராம் இன்று இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங்குடன் பேசினார். அப்போது தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான போராட்டத்திற்கு இஸ்ரேல் முழுமையான ஆதரவை வழங்குகிறது. இந்திய நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாராட்டுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய BSF வீரரை இப்படியெல்லாம் சித்ரவதை செய்தார்காளா? பாக். செய்த கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!!