கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்களை சந்தித்தார். அப்போது மெஸ்ஸியை சரியாக பார்க்க முடியாததால் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீது ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். மைதானத்தை விட்டு மெஸ்ஸி சென்றவுடன் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் ரசிகர்கள் எடுத்து வீசி உள்ளனர். மைதானத்தில் இருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை வீசி ரசிகர்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீது பாட்டில் உள்ள பொருட்களையும் வீசியுள்ளனர்.
கொல்கத்தாவில் மெஸ்ஸியை காண வந்த ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து ரகலையில் ஈடுபட்டதால் தடியடி நடத்தப்பட்டுள்ளது. மெசி வருகைக்காக போடப்பட்டிருந்த மேடையையும் ரசிகர்கள் அடித்து நொறுக்கி இருந்தனர்.

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாந்த நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கூறியுள்ளார். சால்ட் லேக் மைதானத்தில் இன்று காணப்பட்ட நிர்வாகக் குறைபாடுகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளேன் என்று கூறினார். தங்களுக்குப் பிடித்தமான கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை ஒருமுறையாவது காண வேண்டும் என்பதற்காகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக, லியோனல் மெஸ்ஸியிடமும், அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமும் எனது மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெஸ்ஸியை பார்க்கமுடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் ஆவேசம்...! போலீஸ் தடியடி...!
ஓய்வுபெற்ற நீதிபதி அஷிம் குமார் ரே தலைமையில், தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை மற்றும் மலைப்பகுதி விவகாரங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்திருப்பதாகவும், இந்த ஆணையம் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் என்றும் கூறினார். மீண்டும் ஒருமுறை, அனைத்து விளையாட்டு ஆர்வலர்களுக்கும் மன்னிப்பைக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: THE GOAT: கொல்கத்தாவில் பிரம்மாண்ட சிலை... லியோனல் மெஸ்ஸி திறந்து வைப்பு...!