மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன. மாவோயிஸ்டுகள் பள்ளிகள், ரயில் பாதைகள், மற்றும் அரசு கட்டமைப்புகளை அழித்து, அரசின் செல்வாக்கை பலவீனப்படுத்த முயல்கின்றனர். இதன் காரணமாக மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் அவ்வபோது பாதுகாப்பு படையினர் ஈடுபடுவார்கள்.
மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மாநில காவல்துறைகள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. 2009ஆம் ஆண்டு முதல், ஒருங்கிணைந்த நடவடிக்கைத் திட்டம் (Integrated Action Plan) மூலம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சரண்டா காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பின்னர் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டது, மாவோயிஸ்ட் இயக்க மண்டல தளபதி ஹமித் ஹன்ஸ்தா என்பது தெரிய வந்தது. முன்னதாக இவனை பற்றி துப்பு கொடுத்தால் 10 லட்ச ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள், துப்பாக்கி உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
இதையும் படிங்க: சாதனை படைத்த இந்தியா! துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கங்களை வென்று குவித்த வீரர்கள்
ஒரே ஒரு மாவோயிஸ்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அடர்ந்த காடுகள் என்பதால் மற்ற மாவோயிஸ்டுகள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உலக அரசியலையே புரட்டிப்போட்ட சம்பவம்... ஜப்பானில் மோடி கால் வைத்த அடுத்த நொடியே ஆட்டம் கண்ட வல்லரசு...!