கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்களை சந்தித்தார். அப்போது மெஸ்ஸியை சரியாக பார்க்க முடியாததால் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீது ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். மைதானத்தை விட்டு மெஸ்ஸி சென்றவுடன் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் ரசிகர்கள் எடுத்து வீசி உள்ளனர். மைதானத்தில் இருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை வீசி ரசிகர்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீது பாட்டில் உள்ள பொருட்களையும் வீசினர்.
கொல்கத்தாவில் மெஸ்ஸியை காண வந்த ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து ரகலையில் ஈடுபட்டதால் தடியடி நடத்தப்பட்டுள்ளது. மெசி வருகைக்காக போடப்பட்டிருந்த மேடையையும் ரசிகர்கள் அடித்து நொறுக்கி இருந்தனர். மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாந்த நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கூறியுள்ளார்.

இந்த நிலையில், கொல்கத்தா மைதானத்தில் மெஸ்ஸி பங்கேற்ற விழாவை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை காவல்துறை கைது செய்துள்ளது. மெஸ்ஸியை சரியாக காணமுடியாததால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். ஆத்திரத்தில் ரசிகர்கள் இருக்கைகளை பிடுங்கி மைதானத்தில் தூக்கிவீசி ரகளையில் ஈடுபட்டதை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: மெஸ்ஸியை பார்க்கமுடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் ஆவேசம்...! போலீஸ் தடியடி...!
மேலும், கொல்கத்தா மைதானத்தில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியை காண வந்த அனைவருக்கும் டிக்கெட் தொகை திருப்பி தரப்பட உள்ளது. டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பித் தருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க... மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ஏமாந்து போன ரசிகர்கள்... பகிரங்க மன்னிப்பு கேட்ட மம்தா...!