ந்த விவகாரம் இணையத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகள் குறித்து தவெக தலைமையும் அண்மையில் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, பள்ளி வளாகங்களில் ரீல்ஸ் அல்லது சமூக வலைதள வீடியோக்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மாணவர்கள் மற்றும் பள்ளி சூழலை அரசியல் அல்லது விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
அதேபோல், பள்ளிகளுக்கு சென்று அனுமதியின்றி ஆய்வு நடத்துதல், திடீர் பார்வையிடல் அல்லது அதிகாரப்பூர்வ அனுமதியின்றி பள்ளி நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுதல் போன்ற செயல்களை தவிர்க்குமாறும் தவெக தலைமை அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: பட்ஜெட்டுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 4 அமைச்சர்களுக்கு சிக்கல்? முதல்வர் விஜய் அதிரடி திட்டம்?!
கல்வி நிறுவனங்களின் ஒழுங்கையும், மாணவர்களின் கல்விச் சூழலையும் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்பதே அந்த அறிவுறுத்தல்களின் நோக்கமாக கூறப்பட்டது.
இந்த சூழலில், காரைக்குடி பள்ளி வளாகத்தில் மாணவர்கள் எழுப்பியதாகக் கூறப்படும் கோஷம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பள்ளிகளில் அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் அல்லது நடவடிக்கை வெளியாகுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிவகங்கை மாவட்ட சிலம்பக் கழகம் சார்பில் சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது போட்டிகளை அமைச்சர் டி.கே. பிரபு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அமைச்சர் வருகை தந்தபோது, அழகப்பா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் இருபுறமும் வரிசையாக நின்றிருந்த சிலம்பப் பயிற்சி மாணவர்கள் உற்சாகமாக "டிவிகே... டிவிகே..." என கோஷமிட்டனர்.
அதனை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்கள் நின்றிருந்த பகுதிக்கு அருகே ஒலிபெருக்கி மைக் கொண்டு செல்லப்பட்டதால், கோஷம் தெளிவாக பதிவாகி வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து வரும் சில சமூக வலைதள பயனர்கள், "பள்ளி வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகள் அல்லது அரசியல் சார்ந்த கோஷங்களுக்கு இடமில்லை" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இந்த சம்பவம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மிகப்பெரிய அடி விழும்! 7 தொகுதிகளில் தோல்வி உறுதி! முதல்வர் விஜய் டேபிளுக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட்!