போர் பாதிப்புகளுக்கு தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசால் நாட்டு மக்களா என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். Covid19-க்குத் தயாரானதுபோல் West Asia War-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் இனிய பிரதமர் மோடி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார் கடந்த 11 ஆம் தேதி போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும், மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து மார்ச் பன்னிரண்டாம் தேதி நிலைமையின் தீவிரத்தை மத்திய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர் என்றும் கூறினார். மார்ச் 14 ஆம் தேதி தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என அறிவித்ததாக தெரிவித்துள்ளார்.

MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன், தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை, உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி. உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் செலவுக்கு பணம் பதுக்கல்...?! - திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை... அதிர்த்து போன அதிகாரிகள்...!
மக்கள் நலனைக்காக மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியையும் முன்வைத்தார். தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், மக்களைக் காக்க பிரதமர் தயாராக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அவமானம்...! உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி..! நயினார் கொந்தளிப்பு..!!