பீகார் மாநிலத்துல இந்த ஆண்டு இறுதியில சட்டப்பேரவை தேர்தல் வருது. இதுக்காக தேர்தல் ஆணையம் கடந்த ஒரு மாசமா வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பண்ணி வந்துச்சு. இப்போ, ஆகஸ்ட் 1, 2025-ல வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருக்கு. ஜூன் மாசத்துல 7.93 கோடி வாக்காளர்கள் இருந்த பீகார்ல, இப்போ இந்த வரைவு பட்டியல்ல 7.23 கோடி பேரு மட்டும் இருக்கு.
அதாவது, 65 லட்சம் பேரோட பெயர்கள் நீக்கப்பட்டிருக்கு. இறந்தவங்க, வேற மாநிலத்துக்கு இல்ல வெளிநாட்டுக்கு போனவங்க, இரண்டு முறை பதிவு செஞ்சவங்கனு இந்த பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம்னு தேர்தல் ஆணையம் சொல்றாங்க. ஆனா, தகுதியானவங்க பெயர் விடுபட்டிருந்தா, செப்டம்பர் 1 வரை ஆட்சேபனை தாக்கல் பண்ணி பெயரை சேத்துக்கலாம்னு அவகாசம் கொடுத்திருக்காங்க.
ஆனா, இந்த SIR புராசஸ் முழுக்க முறைகேடு நிறைஞ்சதுனு காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மாதிரியான எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருது. இந்த திருத்தத்தை நிறுத்தணும்னு இவங்க தொடர்ந்து கத்தி கதறிட்டு இருக்காங்க. இந்த சூழல்ல, ஒரு பரபரப்பு தகவலை RJD தலைவரும், பீகார் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வெளியிட்டு, அரசியல் களத்தை கலக்கியிருக்கார்.
இதையும் படிங்க: நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

திகா தொகுதி வாக்காளரான தேஜஸ்வி, ராகோபூர் எம்எல்ஏ-வா இருக்காரு. ஆனா, இந்த புது வரைவு வாக்காளர் பட்டியல்ல தன்னோட பெயர் இல்லைனு பட்டாசு வெடிச்சிருக்கார். பாட்னாவுல செய்தியாளர் மீட்டிங்குல, தேர்தல் ஆணையத்தோட மொபைல் ஆப்புல தன்னோட EPIC நம்பரை போட்டு செக் பண்ணி, பெயர் இல்லைனு மீடியாக்காரங்களுக்கு காட்டியிருக்கார்.
“என்னோட பெயரே வாக்காளர் பட்டியல்ல இல்லையே, நான் எப்படி தேர்தல்ல நிக்க முடியும்? இது ஜனநாயகத்தோட படுகொலையில்லையா? வாக்காளர்களோட உரிமையை பறிக்கிற முயற்சி இது!”னு தேஜஸ்வி கோவமா கேள்வி கேட்டிருக்கார். தேர்தல் ஆணையம் பாஜக-வோட கைப்பாவையா மாறி, குஜராத்ல இருந்து ஆர்டர் எடுத்து வேலை செய்யுதுனு குற்றம்சாட்டியிருக்கார். “வாக்காளர்களோட முகவரி, பூத் நம்பர், EPIC நம்பர் எதையும் ஆணையம் வெளியிடலை. இதனால, யாரோட பெயர்கள் நீக்கப்பட்டதுனு கண்டுபிடிக்க முடியலை. இது முழுக்க மோசடி!”னு ஆவேசப்பட்டிருக்கார்.
ஆனா, தேர்தல் ஆணையம் உடனே பதிலடி கொடுத்து, தேஜஸ்வியோட பெயர் பட்டியல்ல இருக்கு, சீரியல் நம்பர் 416, வீட்டு நம்பர் 10, EPIC நம்பர் RABO456228-னு ஆதாரத்தோட விளக்கியிருக்கு. தேஜஸ்வி பழைய EPIC நம்பரை வச்சு தேடியதால பெயர் கிடைக்கலனு சொல்றாங்க.
இந்த சர்ச்சை, பீகார்ல தேர்தல் நெருங்குற நேரத்துல பெரிய புகைச்சலை கிளப்பியிருக்கு. எதிர்க்கட்சிகள் இதை “வோட்பந்தி”னு சொல்லி, ஏழை, புலம்பெயர் தொழிலாளர்கள், சிறுபான்மையினர், பட்டியல் சாதி மக்களோட வாக்குரிமையை பறிக்கிற முயற்சினு குற்றம்சாட்டுறாங்க. சுப்ரீம் கோர்ட்டுல இதை எதிர்த்து வழக்கும் நடந்துட்டு இருக்கு.
இதையும் படிங்க: பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸ். தேர்தல் ஆணையம் வைத்த ட்வீஸ்ட்.. குழம்பும் எதிர்க்கட்சிகள்..