மத்திய அரசுல ஒரு நிரந்தர வேலை வாங்கணும்னு கனவோடு இருக்கீங்களா? குறிப்பாக இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகளுக்கு ஒரு ஜாக்பாட் மாதிரி அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தில 550 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க 550 நிர்வாக அதிகாரி அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ரிஸ்க் இன்ஜினியர் பதவிக்கு 50 பேரும், ஆட்டோமொபைல் இன்ஜினியர் பதவிக்கு 75 பேரும், ஐடி ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு 25 பேரையும் பணியமர்த்தவுள்ளனர். இதுமட்டுமின்றி சட்டம் மற்றும் அக்கவுண்ட்ஸ் பட்டதாரிஅக்ளுக்கும் தனித்தனியாக பணியிட அறிவிப்புகள் வெளியாகியிருக்கு. இதுல ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, ஜெனரலிஸ்ட் என்ற பதவிக்கு மட்டும் 193 இடங்கள் இருக்கு. இதுக்கு யாரு வேணும்னாலும் விண்ணப்பிக்கலாம். சரி இதுக்கு என்ன படிச்சிருக்கணும்னு பார்க்கலாம். ரிஸ்க் இன்ஜினியர் பதவிக்கு நீங்க எந்த பிரிவில் வேண்டுமானாலும் இன்ஜினியரிங் டிகிரி வாங்கியிருக்க வேண்டும். குறைந்தது 60% மதிப்பெண் வாங்கி இருக்க வேண்டும்.
ஜெரனரலிஸ்ட் பதவிக்கு, நீங்க ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காமர்ஸ் என எந்த பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். ஆனா 60% மதிப்பெண்கள் அவசியம். வயது வரம்பு 21 வயசுல இருந்து 30 வயசுக்குள்ள இருக்கணும். அரசு விதிமுறைகளின்படி எஸ்சி,எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயசு தளர்வும் உண்டு. தேர்வு முறை ரொம்ப சிம்பிள். முதன்மை தேர்வு, மெயின் தேர்வுன்னு ரெண்டு எழுத்து தேர்வுகள் மூலமாகத்தான் ஆட்களை தேர்ந்தெடுக்கறாங்க. மாத சம்பளமாக 80 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடலில் பரவும் மர்ம நோய்... வெளியான திடுக்கிடும் காரணம்... அறிவியல் உலகை அதிரவைத்த ஆராய்ச்சியாளர்கள்...!
நமது தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் தேர்வு மையங்கள் உள்ளன. அதனால் வெளி மாநிலத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ரொம்ப முக்கியமான விஷயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வர ஆகஸ்ட் மாசம் 30 ஆம் தேதிதான். எனவே தாமதிக்காமல் உடனே விண்ணப்பியுங்கள்.
சரி எப்படி விண்ணப்பிக்கணும்னு கேக்குறீங்களா? இது ஆன்லைன் மூலமா விண்ணப்பிக்க வேண்டிய வேலை. நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தோட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அங்க கேரியர்ஸ் அல்லது ஆட்சேர்ப்பு பகுதிக்குள்ள போனீங்கன்னா நிர்வாக அதிகாரி ஆட்சேர்ப்புன்னு அதாவது ரெக்ரூட்மென்ட் ஆப் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர்னு ஒரு அறிவிப்பு இருக்கும். அதை கிளிக் பண்ணி உங்க விவரங்களை சரியா பூர்த்தி செஞ்சு தேவையான போட்டோ, கையெழுத்து எல்லாத்தையும் அப்லோட் பண்ணி ஆன்லைன்லயே விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: நடக்கக்கூடாத பெருந்துயரம்.. நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் ஸ்பாட் அவுட்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!