அமெரிக்க உளவுத்துறை சமீபத்தில் செனட் சபையில் தாக்கல் செய்த அறிக்கையில், எதிர்காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருந்தது. இந்த அறிக்கைக்கு பதிலடியாக பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
2014 முதல் 2017 வரை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றிய அப்துல் பாசித், ஒரு உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், “பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மறுகணமே இந்தியாவைத் தாக்குவோம்.
எங்கள் ஏவுகணைகள் அமெரிக்கா வரை செல்லாது. எனவே டில்லி, மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களைத் தாக்குவோம். என்ன நடந்தாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம். மறுயோசனை இல்லாமல் தாக்குதல் நடத்துவோம்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் தலையில் இடியை இறக்கிய ஈரான்! பதிலுக்கு பதில்!! அணுசக்தி நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்!

இந்திய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்க அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்து, “பாகிஸ்தான் ஒரு ரகசிய அணு ஆயுத நடவடிக்கை கொண்ட நாடு. இதுவே உலகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது” என்று தெரிவித்திருந்தது.
அப்துல் பாசித்தின் இந்த பகிரங்க மிரட்டல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுத மிரட்டலை வைப்பது புதிதல்ல என்றாலும், முன்னாள் தூதர் அளவுக்கு உயர்மட்ட அதிகாரி இப்படி பகிரங்கமாக பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா இந்த மிரட்டலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளும் அணு ஆயுத வல்லரசுகள் என்பதால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: தாய், மகளை கடத்தி ஆபாச படமெடுத்து மிரட்டல்?! நிலத்தகராறில் திமுக நிர்வாகி படுபாதகம்!! அண்ணாமலை ஆவேசம்!