திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியதோடு, புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய் தனது உடல் நிலை குறித்து விசாரிக்காததை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவளார்களுடனான கூட்டத்தில் பேசிய அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாசை சிலர் காட்சி பொருளாக பயன்படுத்துகின்றனர். சிலர் ராமதாஸ் மருத்துவ பரிசோதனைக்கு சென்றதை பயன்படுத்திக் கொண்டனர். சிலருக்கு போன் செய்து “அய்யாவுக்கு உடம்பு சரியில்லை வந்து பாருங்க... வந்து பாருங்க...” என அழைத்திருக்கிறார்கள். ஏதோ பொருட்காட்சி போல யார் யாரோ வந்து அய்யாவை பார்த்துவிட்டு சென்றுள்ளனர். 87 வயதில் எளிதாக தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கும் போது, அதைப் பற்றி கவலைப்படாமல் யார் யாரை எல்லாமோ ராமதாஸை பார்க்க அனுமதித்துள்ளனர் என சகட்டுமேனிக்கு விமர்சித்தார்.
அதுமட்டுமின்றி “அய்யாவுடைய பாதுகாப்பிற்கு ஏதாவது ஒன்று ஆச்சு என்றால் தொலைச்சி போட்டுவிடுவேன்” என ராமதாஸ் உடன் இருப்பவர்களை அன்புமணி கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். இதற்கு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்திருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராமதாஸ், ”அய்யாவுக்கு உடம்பு சரியில்லை, வந்து பாருங்கள்” என்று அன்புமணி பேசியதை சுட்டுக்காட்டியவர், அதில் என்ன அசிங்கம் இருக்கிறது என அன்புமணிக்கு பதில் கேள்வி எழுப்பினார். மேலும் அது குறித்து ஏற்கனவே அன்புமணி பேசியதை முழுமையாக பட்டியலிட்ட ராமதாஸ், மாடுமேய்க்கும் சிறுவன் கூட இப்படிப்பட்ட சொற்களை கொட்ட மாட்டார்கள் என்றும், அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்று ராமதாஸ் தெரிவித்தார்.
ஒரு தலைவர்க்கு உடல் நிலை சரியில்லை என்றால் யார் வேண்டுமானும் சந்தித்து நலம் விசாரித்தார்கள். எனக்கு தொற்று ஏற்படும் நோய் இல்லை எனக்கூறினார். நான் வளர்த்த கட்சியையும், கொடியையும் வச்சிகிட்டு என் கட்சி என்று சொல்வது நியாயம் இல்லை. இது தொடர்பாக நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் சந்திப்போம். இப்பவும் சொல்றேன் பாமக வுக்கும் அன்புமணி க்கும் எந்த. சம்பந்தமும் இல்லை என கறாராக கூறினார்.
இதையும் படிங்க: விஜய் கட்சியின் மறுபக்கம்... வீட்டிற்குள் கஞ்சா பதுக்கிய தவெக நிர்வாகி கைது...!
தொடர்ந்து பேசிய அவர், பொதுக்குழுவில் பாமக அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர் எப்படி கட்சிக்கு உரிமை கொண்டாடலாம். இப்பவும் சொல்றேன் அவர்களை போலியான அமைப்பாக தான் மக்கள் பார்ப்பார்கள். அப்பாவும் சொல்றேன், இப்பவும் சொல்றேன் என் வளர்ப்பு சரியாக இருக்குமானல் 21 பேர் சேர்ந்து தனியாக கட்சி ஆரம்பித்துக் கொள்ளுங்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இனி என் பெயர் கொடியை பயன்படுத்துவதை அன்புமணி தவிர்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என்றவர். பல மாநிலங்களில் சில அரசியல் கட்சிகள் 3 ஆக கூட உள்ளது என்றார்.
இதையும் படிங்க: எடப்பாடி 'OUT' விஜய் ‘IN' - பீகார் தேர்தல் பார்முலாவை கையில் எடுக்கும் அமித் ஷா...!