1977 ஆம் ஆண்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஜெய்சங்க இந்திய வெளியுறவுத்துறையில் சேர்ந்தார். 1985 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை மாஸ்கோவின் இந்திய தூதரகத்தில் பணியாற்றியவர். தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக செயலாற்றி வரும் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் குண்டு தொலைக்காத கார் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லியில் உள்ள அவரது வீட்டை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அவரை பாதுகாக்க 33 ஆண்டுகள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை ஒரு சொட்டு சிந்து நீர் கிடைக்காது... வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் திட்டவட்டம்!

இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி..! விமானப்படை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்..!