கடந்த சில நாட்களுக்கு முன்பாக முதலமைச்சர் லேசான தலை சுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது, முதலமைச்சர் அரசு பணி, கட்சி பணிகளை பார்க்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வழக்கமாக செல்லும் சென்னை அடையாறு தியோசோபிக்கல் சொசைட்டி பார்க்கில் வாக்கிங் சென்றார். அந்த பார்க்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாக்கிங் வந்துள்ளார்.
அப்போது ஒருவரை ஒருவர் எதிர், எதிரே சந்தித்துக்கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கைக்குலுக்கி கொண்டனர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓபிஎஸ் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திடீரென ஒரே இடத்தில் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று ஓபிஎஸ் தரப்பில் அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து, நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவரை வீட்டு வாசல் வரை வந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைத்து சென்றார்.
இதையும் படிங்க: `ஊதி ஊதி பெருசாக்காதிங்க..' - கையெடுத்து கும்பிட்ட ராமதாஸ்...!
தொடர்ந்து ஓபிஎஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவிந்திரநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அப்போது அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக பற்றி விசாரிப்பதற்காக மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டாலும், தமிழக அரசியலில் இன்று வரை பேசுபொருளாகவே உள்ளது.
இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் வந்து பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: யார் எந்த யாத்திரை போனாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்புமணியை டாரு டாராக கிழித்த ராமதாஸ்...!