முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான தலை சுற்றலை தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து பலரும் விசாரித்தனர். இதனிடையே, அரசு பணிகளை தொடர்ந்து கவனித்து வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி மாலை வீடு திருப்பினார். இதையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தலைமை செயலகத்திற்கு வந்து பணிகளை தொடர்ந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக ராமதாசிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று தெரிவித்தார். ஆனால் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் நன்றாகவே இருக்கிறார். அவரிடம் நலம் விசாரித்தேன், முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். உங்களுடன் நாங்களும் இருக்கிறோம் அப்படின்னு நீங்க போன்ல சொன்னதாக சொல்றாங்க அதுக்கான அர்த்தம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், நான் போனில் அப்படி சொல்லவில்லை. நீ தான் சொல்லுற, 100 தடவை சொல்லுவேன் நீதான் சொல்லுற, நீ தான் சொல்லுற என செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென போன் போட்ட ராமதாஸ்... தமிழக அரசியலில் பரபரப்பு...!
முதலமைச்சரிடம் போனில் நலம் விசாரித்தது தேர்தல் கூட்டணிக்கான மாற்றமாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஒருத்தருக்கு உடம்பு சரியில்ல, அவர் நம்ப தமிழக முதலமைச்சர். அதற்காக நலம் விசாரிப்பதும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவிப்பதும் வழக்கமான ஒன்று. அதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் சம்பந்தமே இல்லை.
பாமகவின் தலைமை அலுவலகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தான் இயங்குகிறது என்று ராமதாஸ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த ந்லையில் தேர்தல் ஆணையம் அன்புமணி அலுவலகத்தின் முகவரியை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ராமன் இருக்குமிட தான் சீதைக்கு அயோத்தி, அந்த மாதிரி நான் இருக்கும் இடம் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையகம், பாட்டாளி மக்கள் கட்சியினர் அதனை புரிந்து கொள்வார்கள் என்றார்.
இதையும் படிங்க: `ஊதி ஊதி பெருசாக்காதிங்க..' - கையெடுத்து கும்பிட்ட ராமதாஸ்...!