சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரப் பகுதிகளில் நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- சிவகாசி சட்டமன்றத் தொகுதி ஒரு ஸ்டார் தொகுதி. மகாபாரதத்தில் கர்ணன் கூடத் தோற்கலாம். ஆனால் சிவகாசியில் எங்கள் அண்ணன்( கே. டி. ராஜேந்திர பாலாஜி ) தோற்க கூடாது. ராஜேந்திர பாலாஜியுடன் எதிரியும், துரோகியும் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்குள் உள்ள வித்தியாசத்தை பிரித்துப் பார்க்கத் தெரியாதவர் ராஜேந்திர பாலாஜி. அவர் மக்களை மக்களாக பார்க்கக் கூடியவர். அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்துப் போட்டியிட திமுக மற்றும் காங்கிரஸ்காரர்கள் பயப்படுகின்றனர். விவரம் தெரிந்த யாரும் திமுக தந்துள்ள தேர்தல் வாக்குறுதியை ஒரு வாக்குறுதியாகவே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேர்தலுக்குத் தேர்தல் ஒரே விஷயத்தையே முதலமைச்சர் ஸ்டாலின் 100- முறை சொல்வார். ஆனால் செய்ய மாட்டார். தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்களை வாங்குவதற்காக பொய்யான வாக்குறுதிகளை திமுகவினர்கள் சொல்வார்கள்.
தமிழ்நாட்டுப் பெண்களை ஏமாற்ற 8 -ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் தருவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து ஏமாற்றி வருகிறார். பெண்களின் வாக்கு வேண்டும் என்பதற்காக கடந்த தேர்தல் வாக்குறுதியான மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் என்பதை 28- மாதங்கள் கழித்து தகுதியான பெண்களுக்கு மட்டுமே தருவோம் என்று கொடுத்தனர். ஐந்து ஆண்டுகால ஆட்சியில் நாலு தடவைகள் மின்சாரக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்காக மக்களாட்சி நடத்தாமல் மக்களை ஏமாற்றவே மறுபடியும் தேர்தல் வாக்குறுதிகளை தருகின்றனர். திமுக தருகின்ற எட்டாயிரம் ரூபாய் கூப்பன் திட்டம் ஆடித்தள்ளுபடிக்கு கடையில் கொடுப்பது போல் இருக்கும்.
இதையும் படிங்க: மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!!
பல ஏமாற்று வேலைகளை செய்து 2031லும் திமுக ஆட்சிக்கு வந்தால்தான் அந்த கூப்பனே செல்லும் என்பார்கள். மக்களின் பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்வதாக சொல்லி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் தந்த வாக்குறுதிகளை தள்ளுபடி செய்து விடுவார்கள். ரெட்டை இலைக்கு மக்கள் ஓட்டு போட்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுகவை தள்ளுபடி செய்வோம். இன்றைய தினம் அதிமுக 297 திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக கொண்டு வந்து அறிவித்துள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த திட்டங்கள் சிவகாசி மக்களுக்கு தேவை இல்லை. ராஜேந்திர பாலாஜி மேலும் 2000 வாக்குறுதிகளை தந்து சிவகாசி வட்டார மக்களை காப்பாற்றுவார். காங்கிரஸ் கட்சியை திமுக மதிக்காது. திமுகவை காங்கிரஸ் மதிக்காது. அவர்கள் இருவருக்குள் சண்டை நடந்து வருகிறது.
கடந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டனர். விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு விடியல் கொடுக்கவில்லை. தமிழக மக்களின் வாழ்க்கை விடிந்து விட்டதா? முதல்வர் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே விடியலை பார்க்கிறது. என்பதுதான் உண்மை. திமுக தேர்தல் சமயத்தில் மக்களின் கால்களை பிடித்து விட்டு தேர்தல் முடிந்தவுடன் மக்களின் கழுத்தைப் பிடிக்கும். பொய்யான வாக்குறுதிகளை தரும் திமுகவை நம்பாதீர்கள். அடுத்து வரப்போவது அதிமுக ஆட்சி தான் என்று திமுகவினரே பயந்து போய் உள்ளனர். அதிமுகவை எதிர்த்து திமுக கூட்டணியில் இருப்பது கையால் ஆகாத காங்கிரஸ்.
காங்கிரசை காணவில்லை என்று தமிழகத்தில் சுவரொட்டி ஒட்டி 50 வருடம் ஆகிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இன்று எந்த தமிழனும் ஓட்டு போட மாட்டான். ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை தமிழர்கள் நீட் தேர்வு மாணவர்கள் என யார் செத்தாலும் திரும்பி கூட பார்க்காத காங்கிரசுக்கு தமிழர்கள் ஓட்டுப் போட மாட்டார்கள். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் ரஜினிக்கு அருகே ஒரு நாய் அமர்ந்திருப்பது ஏன் என யாருக்குமே தெரியாது. அதே மாதிரி தான் திமுக கூட்டணியில் காங்கிரஸ் எதற்கு இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் பெயரில் மட்டும் தான். ஆனால் அவர்கள் நம்பர் ஒன் கொத்தடிமைகள் ஆவார்கள். தலித் மக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டாலோ அல்லது உயிரிழந்தாலோ திருமாவளவன் வாயை திறக்க மாட்டார். சென்னை விஜிபி கோல்டன் பீச் பொம்மை மாதிரி இருப்பார்.
திருமாவளவன் ஒரு முரட்டு பீஸ். இன்றைய தினம் திமுகவில் உள்ள முத்திப்போன பீஸ் நடிகர் கமலஹாசன். அவர் எதற்காக அரசியலில் உள்ளார் என்பது தெரியவில்லை. திமுக கூட்டணியில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கமலுக்கு சீட்டில்லை கருணாசுக்கு சீட்டு இருக்கு. சப்பானிக்கு சீட்டு இல்லை. ஆனால் லொடுக்கு பாண்டிக்கு சீட் இருக்கு. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்றைய தினம் அரசியலில் சைக்கோ. பத்து பைசாவுக்கு தேறாத அரை சதவீதம் ஓட்டு இல்லாத தேமுதிகவுக்கு சீட்டுகளை கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் குஷிப்படுத்தி உள்ளார். திமுக கூட்டணியில் உள்ளவர்கள் எல்லாம் தேற மாட்டார்கள். தேர்தல் வந்தால் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த சாதனைகளைப் பற்றி பேச வேண்டும். இன்றைக்கு திமுக ஆட்சியில் இருக்கிறது என்றால் அதற்குப் பெண்கள் போட்ட பிச்சை தான் காரணம். எந்த வயதுடைய பெண்களுக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கான பாதுகாப்பு கொடுக்க அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுகவின் 297 தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் வீடுகளை தேடி வந்து சேரும். என்றார்.
இதையும் படிங்க: கமல் ஹாசன் செய்த தியாகம்... திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக திருமா சொன்ன வார்த்தை...!