சிவகங்கையில் உரையாற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசும் மீது அமைச்சர்கள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர். 5 மாவட்ட மக்கள் பயன் பெறும் இந்த திட்டம் அதிமுக ஆட்சி அமைத்த உடன் செயல்படுத்தப்படும்
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் தமிழகம் தான். மக்கள் மீது கடன் சுமை கூடி கொண்டே போகிறது. கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வராக ஸ்டாலின் உள்ளர்.
விவசாயிகளுக்கு கடன் வழங்க கூடாது என உள்ளூர் அமைச்சர் (பெரியகருப்பன்) அமைச்சர் கூறி உள்ளார். கிராமப்புறங்களில் கடைகள் உரிமம் பெற வேண்டும் என சொல்லி உள்ளனர்
தமிழகத்தில கட்டுமான பொருள் விலை ஏற்றத்தால் ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் கனவாக மாறியிட்டது.
இதையும் படிங்க: “மோடி வீட்டு கதவை தட்டாவிட்டால் ஜோலி முடிஞ்சிடும்...” - திமுகவை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி...!
தமிழகத்தில் கஞ்சா, போதை பொருள் விற்பனை அதிகரித்து விட்டது. கொலை, கொள்ள, வழிப்பறி நடக்காத நாளே இல்லை. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா
அதிமுக ஆட்சியில் அதிகளவு தொடக்க, நடு நிலை, மேல்நிலை , கல்லூரி தொடங்கி 52 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு படிப்பறிவ வழங்கினோம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுகீட்டை கொண்டு வந்து ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க வைத்தோம்.14 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த போதே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி இருக்கலாம். திமுக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் போதே மாற்றி இருக்கலாம். அதனை விடுத்து இன்று மத்திய கல்வி அமைச்சர சந்தித்து தமிழக கல்வி துறை அமைச்சர் மனு அளித்துள்ளார்
இதையும் படிங்க: எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றிய இபிஎஸ்... அதிமுகவை சீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள்...!