• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ’அதிமுக - பாஜக கூட்டணி அமையணும் , ஆனால் எடப்பாடி லாயக்கில்லை’- குருமூர்த்தி ...என்னங்க சார் உங்க நியாயம்?

    துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி அதிமுக பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்றார். ஆனால் பெரிய அனுபவசாலிபோல் தான் பார்த்த தலைவர்களில் எடப்பாடி போல் இல்லை என்று தனிப்பட்ட முறையில் அவரைப்பற்றி பேசினார். கூட்டணி குறித்த புரிதலின்றி அவர் பேச்சு இருந்தது.
    Author By Kathir Wed, 15 Jan 2025 14:53:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aiadmk-bjp-alliance-should-be-formed-but-edappadi-is-no

    தமிழக பாஜகவில் அண்ணாமலை வருவதற்கு முன்னர் குருமூர்த்தியின் ஆதிக்கம் இருந்தது. அவர் சொல்வதை மத்திய பாஜக செவிமடுத்தது. அவர் ஓபிஎஸ் தான் மிகப்பெரிய தலைவர் அவரை வைத்து அதிமுக தலைமையை தன் கைக்குள் கொண்டு வந்துவிடலாம் என்கிற சூப்பர் ஐடியாவை கொடுத்தவர் இதே குருமூர்த்திதான். ஒரு தலைவர் எப்படி உருவானார், அவரது பின்னணி என்ன? அவர் எப்படி தலைமை பதவிக்கு வந்தார், ஒரு மனிதர் நமது இழுத்த இழுப்புக்கெல்லாம் வருகிறார் என்றால் அவரிடம் எப்படி தலைமைப் பண்பு இருக்கும் என்கிற அடிப்படை அரசியல் ஞானம் கூட இல்லாமல் ஓபிஎஸ்சை தூக்கி பிடித்தார்கள். 


    ஓபிஎஸ்சை வைத்து அதிமுகவை கைப்பற்றுவது என்பது கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடிப்பது போன்றது. இவர்கள் எதிர்ப்பார்ப்பை ஓபிஎஸ் நிறைவேற்றாதது மட்டுமல்ல திமுக சொல்படியும் கேட்டு அதிமுகவுக்குள்  குழப்பம் விளைவித்தார். அவருக்கு தேவை தன் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் அதற்காக அதிமுகவுக்குள் என்னென்ன குழப்பங்கள் செய்ய முடியுமோ செய்தார். மொத்தத்தில் அதிமுக 2021 முதல் 2023 வரைபல குழப்பங்களை சந்தித்ததற்கு வெளியிலிருந்து பாஜக, திமுக ஆட்டுவித்தப்படி ஆடினார் ஓபிஎஸ். இதனால் அதிமுக பாஜக உறவு முறிந்தது. 

    இதையும் படிங்க: அரசியலில் பெரியாரை 'உடைக்கும்' சீமான்... தலையில் வைத்து கொண்டாடும் துக்ளக் குருமூர்த்தி!

     


    மறுபுறம் அண்ணாமலை தன் பங்குக்கு கூட்டணிக்குள் வீடுகட்டி ஆட்டம் போட்டார் இதனால் கூட்டணி முறிந்தது. திமுகவுக்கு லாபம் ஏற்படுத்தி கொடுத்த அண்ணாமலையால் பாஜக கூட்டணிக்கு 15 தொகுதிகள் இழப்பு ஏற்பட்டது. இதுப்போன்ற புறக்காரணிகள் இருக்கும் நிலையில் கூட்டணி சேரவே வாய்ப்பில்லாத நிலையில் துக்ளக் ஆண்டு விழாவில் அதிமுக பாஜக கூட்டணி சேரவேண்டியது கட்டாயம் என்பதுபோல் பேசிய குருமூர்த்தி அடுத்தடுத்து அண்ணாமலை ஞாபகத்திற்கு வர தானும் குழம்பி வாசகர்களையும் குழப்பி எது நடந்தால் கூட்டணி சாத்தியம் என்பதை சொல்ல தெரியாமல் கடந்து சென்றார். 


    அவரது பேச்சில் “திமுக ஆட்சியை அகற்ற எப்படி வியூகம் வகுக்க போகிறார்கள் எதிர்கட்சிகள் என்பது தான் நம்முன் உள்ள கேள்வி.  திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டுக்கு நாம் ஆற்றும் தொண்டு. அதிமுக தேச விரோத கட்சி அல்ல, பாஜகவும் அதிமுகவும் சேர வேண்டும் என்பதில் நமக்கு சந்தேகமே கிடையாது. ஆனால் எடப்பாடி மாதிரி ஒரு தலைவரை வைத்துக்கொண்டு எப்படி இணைப்பை ஏற்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. 


    பல தலைவர்களிடம் பழகி இருக்கிறேன் ஒரு அரசியல் தலைவருக்கான நோக்கே அவரிடம் இல்லை. 2021 பொதுத்தேர்தலில் அவரை நான் தனிப்பட்ட முறையில் போய் பார்த்தேன் அமித்ஷா சொன்னதன் பேரில் எடப்பாடியை சென்று சந்தித்தேன். அவர் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்து 10, 12 சீட்டு (டிடிவிக்கு) ஒதுக்கியிருந்தால் திமுகவுக்கு தனி பெரும்பான்மை கிடைத்திருக்காது. 


    நீங்கள் வெல்ல முடியாது ஆனால் திமுகவுக்கு மெஜாரிட்டி இல்லாமல் செய்யலாம் என்றேன். திமுகவுக்கு தனிப்பெரும்பானமை கிடைககாவிட்டால் 2006-ல் கருணாநிதி தனியாக ஆட்சி நடத்தியது போல் ஸ்டாலினால் ஆட்சி நடத்த முடியாது கவிழ்ந்துவிடும் என்று சொன்னேன், ஆனால் நாங்க ஜெயிக்கிறோம், நீங்கதான் நாங்கள் ஜெயிக்கமாட்டோம்னு சொல்கிறீர்கள் என்றார். எனக்கு புரியவில்லை யார் இவருக்கு ஆலோசனை கொடுக்கிறார், யார் இவருக்கு புள்ளிவிவரம் கொடுக்கிறார் என்று புரியவில்லை. 


    திமுகவை வீழ்த்த வேண்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா எப்படி உறுதியாக இருந்தார்கள், கட்சி அரசியல் என்பதே இப்போது இல்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் இவர்களால் எனக்கென்ன ஆதாயமா? கட்சிக்கு கட்சி இதுபோன்ற ஆட்கள் இருக்கிறார்கள்”. என்று எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசினார். 
    ஒரு மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் கட்சி துண்டு துண்டாக உடையும் நிலையில் அதை ஒன்றுப்படுத்தி பொதுச்செயலாளராக ஒற்றுமைப்படுத்தி கட்சிக்கு எதிராக உள்ளவர்களை வெளியேற்றி 2026 தேர்தலை நோக்கி 98% பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சி பலத்துடன் நகர்கிறவரை அரசியல் அறியாதவர் என்று சொல்லி விமர்சிக்கும் குருமூர்த்திதான் ஓபிஎஸ்சை ஆதரிக்கிறார். 


    சோ ராமசாமி அரசியல் அறிந்தவர். அவர் இதுபோன்ற காரியத்தை ஒருபோதும் செய்ததில்லை. ஆனால் சோ வுக்கு பின் வந்த துக்ளக் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள குருமூர்த்தி தன்னை ’சோ’ போன்று கருதிக்கொண்டு திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என சொல்லிக்கொண்டே எடப்பாடி போல் ஒரு தகுதியற்ற அரசியல் தலைவரை பார்த்ததில்லை என்று சொல்கிறார். இது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று தெரியாதா? என்ன வாதம் இது என்று தெரியவில்லை. 


    அதிமுக பாஜக கூட்டணி வரவேண்டும் என்கிறார், ”பாஜக -அதிமுக சேரவேண்டும் என்கிற எண்ணத்தில் நான் கூறுகிறேன். பாஜக தன்னுடைய நிலைமையை அதிகமாக மாற்றிக்கொண்டு எப்படியாவது இணையவேண்டும் என்று முடிவெடுத்தால் அது பாஜகவுக்கு நஷ்டம்தான் வரும், இதை பாஜக உணர வேண்டும்”.  என்றும் குழப்பி விட்டு சப்ஜக்ட்டை கடந்து செல்கிறார். மொத்தத்தில் துக்ளக் வாசகர்களையும் குழப்பி தன்னையும் குழப்பி இருக்கிறார் குருமூர்த்தி. 


    கூட்டணி அரசு இனி சாத்தியமா என்று கேட்டபோது அது குறித்தும் தெளிவற்ற பதிலை அளிக்கவில்லை. விஜய்யை தொடாமல் கடந்து சென்றார். அதிமுக கூட்டணி வேண்டும், வேண்டாம். எடப்பாடி சரியான தலைவர் அல்ல இதுதான் குருமூர்த்தியின் மொத்த பேச்சின் சாராம்சம். 

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி...முந்திக்கொண்ட காங்கிரஸ் முடிவுரை எழுதிய திமுக...தொகுதி கைமாறிய பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share