திருப்பூர் மாவட்டம் அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள திருமண மண்டபத்தில், அத்திக்கடவு நாயகன் என்று போற்றப்படும் மறைந்த அம்பலவாணன் செட்டியார் நினைவு நாளான இன்று அவரது வாழ்க்கை குறித்து அவரது பேத்தி சிவகாமி சுந்தரி எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நூலை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், அவிநாசி அத்திகடவு திட்டம் நிறைவேற போராடி பாடுபட்டவர்கள் குறித்து இந்த நூல் படங்களுடன் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ஏராளமானோர் கடினமாக போராடி இந்த திட்டம் வந்துள்ளதாக புத்தகம் குறித்து பேசினார். அமெரிக்கா இந்தியாவிற்கு 50 சதவீத வரி விதித்துள்ளது. பிரதமர் மோடி விவசாயிகளின் பாதுகாப்பிற்கு இந்த விலையை கொடுத்ததாக பேசி உள்ளார்.
மேலும் விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்பது எனது நம்பிக்கை. அடுத்து வரும் பட்ஜெட் அனைத்தும் விவசாயிகளை 5 மடங்கு ஊக்குவிப்பார்கள். இதற்கு மேல் விவசாயி போராட முடியாது. எனவே ஆகஸ்ட் முடியும் முன்பு எல்லா குளம் குட்டையும் நிரம்பும் வகையில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும். அவிநாசி அத்திக்கடவு முதல் திட்டத்தை முழுமை படுத்தப்பட்டு 2ம் திட்டம் செயல்படுத்த வேண்டும். தேனியில் இருந்து வாழை கருப்பையா உள்ளிட்ட 4 விவசாயிகள் பிரதமரை சந்தித்து 25 நிமிடம் பேசி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓட்டு திருடிதான் நீங்க ஜெய்ச்சீங்களா ராகுல்? பூந்து விளாசிய அண்ணாமலை!
ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வர உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரிகள் வெளியிடுவார்கள். கொங்கு பகுதிக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருக்கிறது. அது நல்லபடியாக முடியட்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸுக்காக களமிறங்கும் அண்ணாமலை; டெல்லியை நோக்கி மாஸ்டர் பிளான் - இபிஎஸ், நயினாருக்கு காத்திருக்கும் ஷாக்...!