அதிமுக - பாஜக கூட்டணிக்குள் அன்புச் சகோதரர் விஜய் இணைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அழைப்பு விடுத்திருந்தார். தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் எங்களுடன் விஜய் இணைய வேண்டும் என்று மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அதிமுக - பாஜக - தவெக கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் அதிமுக கூட்டணிக்குள் விஜய் வரணும் அப்படின்னு சொல்லியிருக்கார். அதுகுறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன? அதிமுகவுடைய மனநிலை குறித்து சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அதிமுக மனநிலை குறித்து என்னால் சொல்ல முடியாது. என்னுடைய எண்ணம் என்னவென்றால், திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நடப்பது திமிர் பிடித்த ஆட்சி... தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்!!

தமிழ்நாட்டில சட்டம் ஒழுங்க சரியில்லை. போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை. கிட்டத்தட்ட கடந்த ஆண்டவிட 50%க்கு மேலாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு சொத்துவரி உயர்வு, மின்கட்டன உயர்வு என மக்களுக்கு இந்த ஆட்சியால் மன நிம்மதி இல்லை. அதனால் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்காக ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் எனக்கூறியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணியில் ஏற்கனவே பாமக, தேமுதிக கூட்டணி தொடருமா? என்ற பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. 2026ம் ஆண்டு தேர்தலில் திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதால் விஜய்க்கு தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஆதவ் அர்ஜூனா மூலமாக தூது அனுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் கொள்கை எதிரி என விஜய் குறிப்பிட்ட பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருப்பதால், தவெக தேசிய ஜனநாயக கூட்டணியைத் தவிர்த்து வருகிறது. இதுவரை அதிமுக தரப்பில் இருந்து மட்டுமே விஜயை நோக்கி காய் நகர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பாஜகவும் களத்தில் இறங்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நேற்று முளைத்த காளான்! பச்சா இன் பாலிடிக்ஸ்.. விஜயை தொடர்ந்து தாக்கும் திமுக அமைச்சர்கள்..!